இராமாயணத்தில் ராமர் தோற்ற தருணம்
பெருமாளின் ஒரு அவதாரம் ராமர்.ராமர் வெற்றியின் அதிபதி என்றே சொல்லலாம்.மேலும்,எவர் ஒருவர் ராம நாமத்தை விடாது சொல்லிக்கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.அப்படியாக ராமருக்கே ராம நாமத்தின் மகிமையை உணர்த்திய தருணம் ஒன்று இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ராமாயணம் அனைவராலும் படிக்கப்படவேண்டிய முக்கியமான இதிகாசம்.அதில் ஒருமுறை ராவணன் சீதையை கடத்திச்சென்று விட்டார்.அவருடன் போரிட்டு சீதையை மீட்க வேண்டும் என்பதற்காக வானர படைகள் உள்ளிட்ட ராமரின் படைகள் இலங்கையை அடைய வேண்டும்.
இதற்காக சேது பாலம் அமைக்கும் பணி மிக தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பொதுவாக கல்லை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும்.ஆனால் அனுமன் தலைமையிலான அத்தனை வானரங்களும் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு தலையில் ஒவ்வொரு கல்லாக தூக்கிச் சென்று கடலுக்குள் போட்டனர்.
ராம நாமம் சொல்லியபடியே வானர சேனைகள், ராம நாமம் எழுதப்பட்ட கல்லினை கடலுக்குள் போட்டுக் கொண்டிருந்தன. சொல்லி வைத்தது போல், வானரங்கள் தூக்கிக் போட்ட ஒவ்வொரு கல்லும் ஒன்றின் மீது ஒன்று சரியாக அமர்ந்தன.
பாலம் அமைக்கும் பணியை கவனித்தபடி அனைவருக்கும் அருள் செய்து கொண்டிருந்தனர் ராமரும், லட்சுமணரும். கற்கள் கடலில் முழ்காமல் ஒன்றின் மீது ஒன்றாக சரியாக அமர்வதை பார்த்த ராமருக்கு மிகவும் ஆச்சரியம் அது மட்டும் அல்லாமல் தாமும் அது போல் கல்லை எடுத்துப் போட்டு பாலம் அமைக்கும் பணியில் பங்கேற்க வேண்டும் என ஆசை வந்தது.
அந்த ஆசையில் ராமர் ஒரு கல்லை எடுத்து கடலில் போட்டார்.அது அலைகளால் அடித்து செல்லப்பட்டது. மீண்டும் ஒன்று கல்லை போட்டார், அதுவும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இது ராமருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அது எப்படி?வானரங்கள் போடும் கற்கள் சரியாய் அமர்கிறது,நான் போடும் கற்கள் கடலில் அடித்து செல்லப்படுகிறது என்று ஒரே குழப்பம்.
இவ்வாறு நடந்து கொண்டு இருப்பதை அனுமன் பார்த்து கொண்டு இருந்தார்.ராமர் அருகில் சென்றார் உடனே அனுமனை பார்த்த ராமர்,பார்த்தாயா அனுமன் என்னால் ஒரு கல்லை கடலில் போட முடியவில்லை.என்னை பார்ப்பதற்கு எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார் ராமர்.
உடனே அதற்கு அனுமன் ராமரிடம் வானரங்கள் போடும் கற்கள் மட்டும் எப்படி சரியாக அமையப்பெறுகிறது என்ற ரகசியத்தை சொல்கிறார். "பிரபு இதில் உங்களுடைய தவறு ஏதும் இல்லை. வானரங்கள் அனைவரும் தங்களை நினைத்தவாறே,இடைவிடாது ராம நாமத்தை ஜபித்த படி கற்களை கடலில் போட்டன.
அதனால் ராம நாமத்தின் மகிமையால் அந்த பணி வெற்றியாக நடந்தது.ஆனால் தாங்கள் ராமராக இருந்தாலும், ராம நாமம் சொல்லாமல் போட்டதால் அந்த கற்களை சரியாக பொருந்தவில்லை" என்றார்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் ராம நாமத்தின் மகிமையை.எவர் ஒருவர் ராமநாமம் சொல்லி ஒரு காரியத்தை தொடங்குகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் அந்த காரியத்தில் வெற்றி என்பது உறுதி.
ஸ்ரீ ராம ஜெயம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |