நீங்கள் ரிஷப ராசியில் பிறந்தவரா? உங்களுடைய கர்மபலன் என்ன தெரியுமா ?

By Sakthi Raj Jun 05, 2026 08:00 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கர்ம பலன் இருக்கிறது.இவை நாம் முன் பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப நாம் இந்த பிறவியில் ஒவ்வொரு ராசி நட்சத்திரத்தை நம்முடையதாக பெறுகின்றோம். அந்த வகையில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை பெற்ற ரிஷப ராசியினர் அவருடைய கர்ம பலன் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷப ராசிக்காரர்கள் அர்த்த ஸ்தானத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுடைய கடமைகளை இவர்கள் சரியாக செய்வதில் முழு கவனம் செலுத்துவார்கள். குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு இவர்கள் எந்த விதத்திலும் துரோகம் செய்ய மாட்டார்கள். ஆதலால் இவர்களுடைய கர்ம பலன் எப்பொழுதும் சரியாக இருக்கும்.

இழந்த சொத்துக்களை மீட்க வேண்டுமா? குபேரன் வழிபட்ட இந்த ஆலயம் சென்று வாருங்கள்

இழந்த சொத்துக்களை மீட்க வேண்டுமா? குபேரன் வழிபட்ட இந்த ஆலயம் சென்று வாருங்கள்

இருப்பினும் செவ்வாய் 12 கூடியவராக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்கள் அடிக்கடி சட்டரீதியான சிக்கல்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலர் இந்த ராசிகள் பிறந்தவர்கள் வழக்கறிஞராக காவல்துறையில் பணிபுரிபவராக இருப்பதையும் நாம் பார்க்கின்றோம். இருந்தாலும் ஒரு ஆவணங்களில் கையொப்பம் போடும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவர்கள் 25 வயதிற்கு பிறகு நல்ல பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வார்கள், மருத்துவம் மற்றும் சட்டம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை பார்ப்பதை விட சொந்த ஊர்களில் இவர்கள் வேலை பார்ப்பது இவர்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.

இவர்கள் சொத்துக்களை பிறருடைய பெயரில் வாங்காமல் தங்களுடைய பெயர் அல்லது துணை பெயரின் வாங்கினால் நல்லது. உடல் உபாதை என்று எடுத்துக் கொண்டால் இவர்களுக்கு வயிறு, லிவர் மற்றும் மூட்டு வலி தொடர்பான விஷயங்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது ஆதலால் விஷ்ணு சகஸ்ரநாமம் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது இவர்களுக்கு எல்லா முன்னேற்றத்தை கொடுக்கும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US