நம் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்கும் முறை என்ன?
நாம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றோம். ஆனால் இன்னும் பலருக்கு கோயிலுக்கு சென்று எப்படி இறை வழிபாடு செய்யவேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படும்.
இந்த பதிவில் கோயிலுக்கு சென்றால் எப்படி இறைவனை தரிசிப்பது என பார்ப்போம்.
முதலில், கோயிலுக்கு சென்று நாம் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். ஏன் என்றால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சொல்வர்.
கோபுரத்தில் உள்ள கலசத்தில் அத்தனை சக்தி நிறைந்து இருக்கிறது. முதலில் கலசத்தின் அருள் பெற்று பின் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
பின், கோயிலுக்குள் சென்ற உடன் நம்மில் பல பேர் சுவாமியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சன்னதியின் உள்ளே நுழைந் உடன் நேராக சுவாமி முகம் பார்த்து தரிசிக்க தொடங்கி விடுவோம். .
ஆனால் உண்மையில் சுவாமியின் பாதங்களை முதலில் பார்த்து வணங்கிய பின் முகத்தையும், தரிசிக்க வேண்டும்.
இதற்கு, ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ,சூரியன் காலை உதயமாகும் பொழுது சுவாமியின் பாதத்தின் மேலும்,பின் மாலை அஸ்தமனமாகும் பொழுது சுவாமி மேனி முழுவதையும் தரிசித்து விட்டு மறைகிறார் .
இதன் அடிப்படையில் தான் நாமமும் இறைவனை தரிசிக்க வேண்டும், இதுவரை தெரியாதவர்கள் இதை கடைபிடிக்காமல் போனவர்கள் இனி கோயிலுக்கு செல்லும் பொழுது சூரியனை போல் சுவாமியின் பாதத்தை தரிசித்து விட்டு பின் முகத்தை தரிசனம் செய்து இறைவனின் பரிபூர்ண அருள் பெறுவோம்.