பக்தர்கள் பசி ஆற்றிய பிறகே நடை சாற்றும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

By Sakthi Raj Jul 26, 2024 05:30 AM GMT
Report

ஆன்மிகம் என்பது மக்களை மேம்படுத்துவது.அதாவது நாம் கோயிலுக்கு சென்றோம் சுவாமி தரிசனம் செய்தோம் என்று இல்லாமல்,உலக உயிருக்கு நம்மால் ஆன உதவி என்ன செய்தோம் என்பது தான் மிக முக்கியம்.

அதாவது நம்முடைய இறை வழிபாட்டால் உலகத்தில் ஓர் உயிர் கூட நன்மை பெறவில்லை என்றால் அந்த இறை வழிபாடு பயனற்றது.

அப்படியாக இதை உணர்த்தும் பொருட்டு கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் ஒவ்வொருமுறையும் கோயில் நடை சாத்தும்போதும் பகலிலும் , இரவிலும் கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்கிறார்.

பக்தர்கள் பசி ஆற்றிய பிறகே நடை சாற்றும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா? | Temple Feed Hungry People Before Closing Worship

அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும்.

இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர். அதாவது பக்தர்கள் வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் இந்த கோயில் திகழ்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லவோற்சவம் கொண்டாட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லவோற்சவம் கொண்டாட்டம்


வியாக்ரபாதர் முனிவர் இங்கு பூஜை செய்து, இறைவன் கார்த்திகை - அஷ்டமியன்று காட்சி கொடுத்தார் . இறைவன் காட்சி கொடுத்த திதி இன்றும் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.

அன்றுமட்டும் சூரிய ஒளி சிவலிங்க திருமேனி மீது மாலையாக படும். இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது.

பக்தர்கள் பசி ஆற்றிய பிறகே நடை சாற்றும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா? | Temple Feed Hungry People Before Closing Worship

மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US