எல்லா வேதங்களையும் தலையணையாக கொண்ட பெருமாள் எங்கு உள்ளார் தெரியுமா?

By Sakthi Raj Apr 19, 2026 01:20 PM GMT
Report

 இறைவனுடைய அவதாரம் பல்வேறு வகையாக இருக்கிறது. அதாவது பக்தர்களுக்கு எந்த நேரத்தில் என்ன இன்னல்கள் தோன்றுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் இறைவன் அவதாரம் எடுத்து பக்தர்களை காத்து வருகிறார்.

அப்படியாக தமிழகத்தில் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கக்கூடிய பெருமாளும் அவை அமைந்து இருக்க கூடிய கோவில்களும் பற்றி பார்ப்போம்.

எல்லா வேதங்களையும் தலையணையாக கொண்ட பெருமாள் எங்கு உள்ளார் தெரியுமா? | Temple In Tamilnadu Were Perumal Appear Uniqueform

ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இன்று முதல் இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!

ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இன்று முதல் இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!

1. சிவபெருமானை போல முக்கண் உடைய பெருமாளை காண வேண்டுமென்றால் சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் இருக்கிறது.

2. எங்கும் காண கிடைக்காத காட்சியாக திருகண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் பெருமாள் சங்கு சக்கரம் தாங்கிக் பக்தர்களுக்கு அற்புதமான காட்சி அளிக்கிறார்.

3. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் பள்ளிகொண்ட பெருமாள் இருக்கக்கூடிய திருத்தலம் திருமயம் ஆகும். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் திருமால் கோயில் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் 1 ஆம் தேதி பிறந்த நபரா? உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு இது தானாம்

நீங்கள் 1 ஆம் தேதி பிறந்த நபரா? உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு இது தானாம்

4. திருச்சி அருகே முசிறி சாலையில் இருக்கக்கூடிய வேத நாராயணன் என்கின்ற பெருமாள் ஆலயத்தில் பெருமாள் எல்லா வேதங்களையும் அவருடைய தடையணையாக வைத்து படுத்திருக்கிறார். இதனால் அவர் வேத நாராயணனாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

5. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் அனந்த சரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக அருள் பாலிக்கிறார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

6. பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயணித்தபடி தான் இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் கொடை பிடிக்க பெருமாள் நின்றகோலத்தில் நமக்கு அருள் கொடுக்கிறார்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US