தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
தென் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்று.
இக்கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் திகதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இன்று அதிகாலையில் 6ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூா்த்திகளுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |