திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெற்றிலை பரிகாரம்
நம் அன்றாட வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அப்படியாக அந்த பிரச்சனையில் இருந்து மீள்வது என்பது அளவு கடந்த விஷயம் ஆகிறது. அப்படி நமக்கு பிரச்சனை வரும்பொழுது நாம் இருகப்பற்றுக் கொள்வது இறைவனின் திருவடிகளை மட்டுமே.
அதிலும் முருகப்பெருமானை சரணடைந்தார் முருகப்பெருமான் வேலும் மயிலும் கொண்டு எத்தனை பெரிய இன்னல்கள் இருந்தாலும் அதை தகர்த்தெறிய கூடியவர் என்பது நம் அனைவரும் தெரிந்தது.
அப்படியாக நிறைய கஷ்டங்கள் வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை துன்பங்கள் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு சென்று ஆறு வெற்றிலை வாங்கிக் கொள்ள வேண்டும்.
அப்படி ஆறு வெற்றிலை வாங்கிய பிறகு கடல் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வெற்றிலையில் தனக்கு என்ன துன்பங்கள் இருக்கிறது? யாரால் துன்பம் நேர்கிறது? எதிரிகள் யார்? என்று அந்த ஆறு வெற்றிலையில் ஒவ்வொரு வெற்றிலைகள் நாம் எழுதிக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த வெற்றிலையை கடல் நோக்கி முருகப்பெருமானை பிரார்த்தித்து அந்த வெற்றிலையை கடலில் விட கடல் அலைகள் உள்வாங்குவது போல் நம்முடைய துன்பங்களும் இன்னல்களையும் கடல் வாங்கிக் கொள்ளும் என்பது ஐதீகம்.
இதை வெறும் பரிகாரமாக எண்ணாமல் முழு மனதோடு முருகப்பெருமான் மீது அன்பும் பக்தியும் வைத்து எவர் ஒருவர் இந்த காரியத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் அந்த காரியத்தில் வெற்றியும் பலனும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இதை எந்த நாளில் திருச்செந்தூருக்கு சென்றாலும் நாம் செய்யலாம். ஆதலால் நம்பிக்கையும் பிராத்தனை மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இந்த பரிகாரம் செய்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |