இன்றைய ராசி பலன்(29.01.2025)
மேஷம்:
நீண்ட நாள் வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருளை வாங்குவீர்கள்.சிலர் தொலை தூர பயணம் செல்ல நேரிடலாம்.வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் இறைவழிபாடு செய்வது வெற்றியை கொடுக்கும்.
ரிஷபம்:
உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டாலும் உங்கள் புத்தி கூர்மையால் அதை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் அதிர்ஷடம் பெருகும்.சகோதரன் சகோதிரி உறவில் நல்ல இணைப்பு உண்டாகும்.நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று எதையும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.வண்டி வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.யாரையும் நம்பி எந்த ஒரு காரியமும் கொடுக்க வேண்டாம்.ஒன்றுக்கும் மேற்பட்ட பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கடகம்:
வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.எதிர்பார்த்த தகவல் வரும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சிம்மம்:
நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகும்.யாரும் எதிர்பாராத காரியத்தை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.பகைவரால் சில நெருக்கடிகள் உருவாகலாம்.மனதில் இருந்த குழப்பம் விலகும்.
கன்னி:
குழப்பம் தவிர்த்து செயல்படுவது நன்மையாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் வேலையில் வெற்றி உண்டாகும். பொன் பொருள் சேரும்.
துலாம்:
நீங்கள் செய்யும் செயலில் ஆதாயம் உண்டாகும்.பிறர் குணம் அறிந்து செயல்படுவீர்கள்.இறைவழிபாடு உங்களுக்கு மிக பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்:
எதிர்பார்த்த தகவல்வரும். சகோதரர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.முன்னோர் வழிபாடு உங்கள் மனதில் தெளிவை உண்டாக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
தனுசு:
பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.குடும்பத்தில் பிறர் தேவை அறிந்து செயல்படுவீர்கள்.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
மகரம்:
வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். கவனம் அவசியம். நீண்டநாள் முயற்சி இன்று ஆதாயம் தரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
கும்பம்:
பணத்தைக் கையாளும்போது கவனம் அவசியம். முன்னோர் வழிபாடு நன்மையாகும்.இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.
மீனம்:
பல வருடம் காலமாக முடிவிற்கு வராத பிரச்சனை ஒன்று நல்ல முடிவு பெரும்.உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வ்ரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |