தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

By Yashini Jan 27, 2025 07:30 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி | Thai Amavasay Devotes To Visit Chathuragiri Temple

அதன்பாடு இன்று முதல் முதல் 30ஆம் திகதி வரை 4 நாட்கள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி | Thai Amavasay Devotes To Visit Chathuragiri Temple

அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இவ்வழிபாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           

          

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US