தைத்திருநாள் சிறப்பு ராசி பலன்கள் ( 15-01-2026)
மேஷம் :
இன்று நீங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் நாள். ஒரு சிலர் வண்டி வாகனம் வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் :
இன்று உங்களுக்கு அத்தை வழி உறவால் சில சங்கடமான நிலை வரலாம் . மனதில் சில குழப்பங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.
மிதுனம் :
இன்று உங்களுக்கு மனம் சில பதட்டமான நிலையில் காணப்படும். உறவினர்கள் வீட்டிற்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத பரிசு பொருட்கள் கிடைக்கும் நாள்.
கடகம் :
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். குழந்தைகளுடன் உங்கள் நேரத்தை செலவு செய்வீர்கள். குலதெய்வ அருள் கிடைக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக சில குழப்பங்கள் வரலாம்.
சிம்மம் :
இன்று வியாபாரத்தில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். சிலர் மதியம் மேல் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் நிலை வரலாம்.
கன்னி :
திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்த பிரச்சனை விலகும். மருத்துவ செலவுகள் சிலர் சந்திப்பீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். நன்மையான நாள்.
துலாம் :
இன்று உங்கள் மனதில் நல்ல தெளிவு பிறகும். வேலை பளு குறையும் நாள். உடல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். சமுதாயத்தில் உங்களுக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும் நாள்.
விருச்சிகம் :
குடும்பத்தில் சில பதட்டமான நிலை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெயர் புகழ் பெரும் நாள்.
தனுசு :
உங்கள் வீடுகளில் இருந்த குழப்பம் விலகும். கலை துறையில் இருப்பவர்களுக்கு சில கடினமான நிலை வரலாம். பொருளாதாரத்தில் சந்தித்த சிக்கல் விலகும். மகிழ்ச்சியான நாள்.
மகரம் :
சிலருக்கு புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். காதல் வாழ்க்கையில் சந்தித்த சிக்கல் விலகும். குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம் :
இன்று தேவை இல்லாத அலைச்சல் உண்டாகலாம். பொறுமையாக செயல்படுவது அவசியம். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
மீனம் :
குடும்பத்தில் அனுசரித்து செல்வது அவசியம். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |