தைப்பூசம் அன்று மட்டும் கிடைக்கும் தேர் மிட்டாய்.. ஆர்வமுடன் வாங்கி சென்ற பக்தர்கள்

By Sakthi Raj Feb 01, 2026 07:00 AM GMT
Report

தமிழ்நாட்டில் பாரம்பரிய மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகையாகும். இந்த இனிப்பை நாம் கிராமங்களில் நடக்கக்கூடிய திருவிழாக்களின் பொழுது மட்டுமே வாங்கி சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த இனிப்பானது அடர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிறிய கட்டிகளாக காட்சியளிக்கும்.

அதாவது அரிசி மற்றும் உளுந்து மாவில் செய்யப்பட்டு அதை சர்க்கரை பாகில் ஊறவைத்து கொடுக்கக்கூடிய இந்த மிட்டாய் வெளிப்புறம் கடினமாகவும் உட்புறம் ஜூஸியாகவும்இருக்கக்கூடியது. இந்த இனிப்பானது திருவிழா காலங்களில் கிராமப்புற கடைகளில் விற்பதை நாம் காணமுடியும்.

அதிலும் தேர் மிட்டாய் தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் திருவிழா மற்றும் கடைகளில் மிகவும் பிரபலமாக கிடைக்கக்கூடியது. அதாவது இந்த காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

தைப்பூசம் அன்று மட்டும் கிடைக்கும் தேர் மிட்டாய்.. ஆர்வமுடன் வாங்கி சென்ற பக்தர்கள் | Thaipusam 90S Kids Special Tamilnadu Chariot Sweet

12 ராசிகளிடமும் இருக்கக்கூடிய மிக மோசமான குணம் என்ன தெரியுமா?

12 ராசிகளிடமும் இருக்கக்கூடிய மிக மோசமான குணம் என்ன தெரியுமா?

இந்த தைப்பூசத் திருநாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள். அவ்வாறு இந்த ஆலயம் வந்து தைப்பூச தினத்தன்று தரிசனம் செய்யக்கூடிய முருக பக்தர்கள் அனைவரும் தவறாமல் இந்த தேர் மிட்டாயை வாங்கி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது தைப்பூச திருநாளையொட்டி இந்த தேர் மிட்டாயின் உற்பத்தியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இனிப்பு தேர் போன்ற அமைப்பு இருப்பதால் மக்களை எளிதாக கவரக்கூடிய தன்மையை இயல்பாக பெற்றிருக்கிறது.

பலரும் அறிந்திடாத சிறப்பு வாய்ந்த தைப்பூசம் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

பலரும் அறிந்திடாத சிறப்பு வாய்ந்த தைப்பூசம் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

தைப்பூசம் அன்று மட்டும் கிடைக்கும் தேர் மிட்டாய்.. ஆர்வமுடன் வாங்கி சென்ற பக்தர்கள் | Thaipusam 90S Kids Special Tamilnadu Chariot Sweet

அதைப்போல் இதனுடைய சுவையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு வைக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. அதேபோல் இந்த மிட்டாய் ஆனது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு,தென் தமிழகத்தின் பிற கோவில் திருவிழாக்களிலும் ஒரு சில இடங்களில் கிடைக்கிறது.

இதைவிட முக்கியமாக இந்த தேர் மிட்டாய் ஆனது காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா காலங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காளிப்பட்டியில் நடைபெறும் தைப்பூச தேர்த்திருவிழாவின் பொழுது முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்படும் சிறப்பு பிரசாதமாகவும் இந்த சீனி மிட்டாய் இருக்கிறது. வருடம் ஒரு நாள் மட்டும் கிடைக்கக்கூடிய இந்த மிட்டாயை பக்தர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US