தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகர் மந்திரம்
முருகப்பெருமானுக்கு உரிய தைப்பூசம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது.அன்றைய தினம் பலரும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.மிகவும் சக்தி வாய்ந்த இந்த நாளில் நாம் முருகப்பெருமானை நினைத்து வேண்டுதல் வைக்க நிச்சயம் நம் வாழ்வில் பல முக்கியமான மாற்றங்கள் நடக்கும்.
அதே போல் தைப்பூசம் நாள் அன்று பலரும் முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து பாதையாத்திரை செல்வார்கள்.நாம் விரதம் இருந்து முருகப்பெருமானை மனதார வழிபடுவதோடு சேர்த்து முருகப்பெருமானுக்கு உரிய பாடல்கள் சொல்லி வழிபாடு செய்ய பலமடங்கு பலன் கிடைப்பதோடு.நம்முடைய தோஷங்கள் கஷ்டங்கள் எல்லம் படிப்படியாக குறையும்.
வேல்மாறல் பாடல்:
வரிகள் பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்கு நிகராகும்
திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
இந்த பாடல்கள் நாம் மனதார நம்பி செய்து வர உலகம் எவ்வளவு அற்புதம் நிறைந்தது என்று உங்களுக்கு புரிய வரும்.இறைவனை நம்பினோர் கெடுவதில்லை என்ற உண்மையை உணர்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |