விதியை மாற்றி எழுதும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?
நமக்கு ஏற்படும் அன்றாட பிரச்சனைகளுக்கு நம் சுலபமாக கை காட்டுவது விதி.எத்தனை பெரிய துன்பமோ இன்பமோ எல்லாம் விதி ஆதலால் இப்படி நடக்கிறது என்று சொல்லிவிடுவோம்.
சிலர் விதியை வெல்வது கடினம் என்பார்கள்.சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்.ஆனால் உண்மையில் விதியை இறைவழிபாட்டால் மட்டும் தான் வெல்ல முடியும்.
மாற்ற முடியும்.அப்படியாக நம் விதியை மாற்றி அமைக்கக்கூடிய கோயிலாக சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் திருச்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் முன்பாகவே திருப்பட்டூர் என்ற கிராமம் உள்ளது.
அங்கேதான் நம் விதியை மாற்ற கூடிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். இன்னும் சுவாரசியம் என்னவென்றால் நமக்கும் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே இக்கோயிலுக்கு செல்ல கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
படைப்பு தொழிலை செய்து வந்த பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. மும்மூர்த்திகளில் ஒருவராக இருந்த பிரம்மனுக்கு கர்வம் கொஞ்சம் சற்று அதிகமாகவே இருந்தது.
பிரம்மனின் இந்த கர்வத்தை போக்க நினைத்த சிவபெருமான் அவரின் ஐந்தாவது தலையை வெட்டி எடுத்தது மட்டுமில்லாமல் ‘படைக்கும் தொழிலையும் இழக்க நேரிடும் என்று சபித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரம்மன் சிவனிடமே சாபவிமோஷனம் வேண்டினார்.
அதற்கு சிவனும் தேசம் முழுவதும் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டு வரவும். தக்க நேரம் வரும்போது நானே சாப விமோஷனம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அப்படி தேசம் முழுவதும் சுற்றி வந்த பிரம்மன் கடைசியாக திருப்பட்டூர் வந்து சிவனை தரிசிக்க அவருக்கு சாபவிமோஷனம் கொடுத்து படைக்கும் தொழிலையும் திரும்ப வழங்கினார்.
இதனால் பிரம்மனால் வழிப்பட்டு சாப விமோர்ஷனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றது. படைக்கும் தொழில் மட்டுமில்லாமல் இங்கு வந்து வணங்கினால், அவரின் தகுதிக்கு ஏற்ப தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று சிவபெருமான் வரமளித்தார்.
அதனால் இக்கோவிலுக்கு சென்று ஜாதகத்தை வைத்து வழிப்பட்டால் நம் தலையெழுத்தே மாறும் என்று சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் இழந்தவர்கள் மீண்டும் இழந்தவற்றை பெறுவதற்கு இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்லலாம்.
இங்கேயிருக்கும் பிரம்மன் சன்னதியில் ஜாதகத்தை கொடுத்து வேண்ட நம் தலையெழுத்து மாறிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கே பிரசாதமாக மஞ்சள் கொடுக்கப்படுகிறது.
இந்த கோவிலில் இன்னொரு விஷேசம் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
இங்கு அமைதியாக அமர்ந்து தியானித்தால் அந்த அதிர்வலைகளை உணர முடியும். இந்த கோவிலில் உள்ள காலபைரவரின் விபூதி எத்தனை பெரிய வியாதியையும் குணப்படுத்தும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
முடிந்தால் நாமும் இக்கோயிலுக்கு சென்று நம் விதியை மாற்றி அமைத்து வாழ்க்கையில் அனைத்து செல்வ வளங்களையும் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |