பட்டுக்கோட்டை - அறந்தாங்கி செல்லும் சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம் ஆலயத்தின் எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜன் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயத்தில் தினமும் எமகண்ட நேரத்தில், எமதர்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
எமதர்மனை இங்கு வழிபடும் பக்தர்கள், நேருக்கு நேராக நின்று வணங்குவதில்லை என்கிறார்கள்.
இவரை வணங்கினால், நமக்கான நீதி உடனடியாக கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்தப் பகுதியில் நடைபெறும் எந்த மங்கல நிகழ்வாக இருந்தாலும், அதற்கான பத்திரிகையை, எமதர்மனின் காலடியில் சமர்ப்பித்து வழிபட்டு வாங்கிச் செல்கின்றனர்.
நீண்ட ஆயுள் கிடைக்க, மரண பயம் நீங்க, திருமணத் தடை அகல என்று இங்கே வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளமாம்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.
எமதர்மராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |