தீபாவளி உணர்த்தும் நீதியின் ரகசியம்? கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

By Sakthi Raj Nov 06, 2026 09:08 AM GMT
Report

பொதுவாகவே, இருவருக்கு இடையே பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையை செய்தவர்கள் தனக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்குவது தான் தர்மமாகும். அந்த வகையில், அதைத்தான் நாம் நடுநிலையாக செயல்படக்கூடியது என்கின்றோம். அதோடு, இந்த நடுநிலையை நாம் எப்பொழுதும் தராசுடன் ஒப்பிட்டு பார்த்து சொல்வதுண்டு.

தராசு நமக்கு சரியாக துல்லியமாக இடைபோட்டுக் கொடுக்கும். அவ்வாறு ஒருவர் வாழ்வதே அறம் ஆகும். அப்படியாக, இந்த நடுநிலைமைக்கும் தீபாவளிக்கும் ஒரு சுவாரசிய தொடர்பு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

தீபாவளி கொண்டாட கூடிய தமிழ் மாதமான ஐப்பசிக்கும் துலாம் மாதம் என்று பெயர் உண்டு. துலாம் என்பது தராசை குறிக்கக்கூடிய சொல்லாகும்.

தீபாவளி உணர்த்தும் நீதியின் ரகசியம்? கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை | The Hidden Truth Behind Diwali Festival

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்?

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்?

தராசு எப்படி இருபுறமும் சம நிலையாக அளவெடுத்து நமக்கு காட்டுகிறதோ அதேபோல் மனிதர்களுடைய வாழ்க்கையிலும் எந்த பக்கமும் சாய்ந்து போகாமல் தர்மமாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும் என்பதை நமக்கு அவை நினைவூட்டுகிறது.

நரகாசுரன் வதம் உணர்த்தும் நீதியின் பாடம்:

தீபாவளி தொடர்புடைய ஒரு மிக முக்கியமான புராணங்களில் நரகாசுரன் வதம் ஒன்று. நரகாசுரன் அவருடைய வலிமையையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி உயிர்களுக்கு துன்பம் கொடுத்து வந்ததாக புராணங்கள் சொல்லுகிறது.

அப்படியாக, அவருடைய கொடுமைகள் எல்லை மீறி போக உலக உயிர்களை காப்பதற்காக மகாவிஷ்ணு அவனை அழிக்க முடிவு செய்கிறார்.

தீபாவளி உணர்த்தும் நீதியின் ரகசியம்? கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை | The Hidden Truth Behind Diwali Festival

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள்

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள்

இந்த நிகழ்வில் சத்தியபாமாவிற்கும் மிக முக்கியமான பங்கு இருக்கிறது. அதாவது, நரகாசுரன் தன்னுடைய மகனாக இருந்தாலும் செய்த தவறுகளுக்கு அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று சத்தியபாமா எப்பொழுதும் நினைக்கவில்லை.

சத்தியபாமாவிற்கு தாய் பாசம், உறவு பாசம் எல்லாம் தாண்டியும் நீதி முக்கியம் என்பதை அவள் உணருகிறார். இறுதியில் நரகாசுரன் கொடுமைகளுக்கு முடிவு கட்டி அவனை அழித்து நீதியை நிலைநாட்டினார்கள் மஹாவிஷ்ணுவும் சத்யபாமாவும்.

ஆக, இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது யாராக இருப்பினும் அவர்களுடன் நாம் நடுநிலையாகவும் தர்மத்தோடும் செயல்பட வேண்டும் என்பதை இவை நமக்கு உணர்த்துகிறது. சொந்த உறவாகவே இருந்தாலும் தவறு என்று ஒருவர் செய்கின்ற பொழுது அவர்களுடன் துணை போகக் கூடாது என்பதை உணர்த்துகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US