வீட்டின் வாசலில் உப்பை கட்டி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, இரண்டு வகையான ஆற்றல்களும் வீட்டின் பிரதான வாசலில் குடிக்கொண்டு இருக்கிறது.
அது நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் சரி. அத்தகைய சூழ்நிலையில், வீட்டின் பிரதான நுழைவாயிலில் வாஸ்து தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம் வீட்டிற்கு ஏற்படும் தீமைகளை குறைக்கவும் முடியும் நன்மைகளை அதிகரிக்கவும் செய்யும்.
அத்தகைய பிரச்சினைகளும் உதவும் ஒரே பொருள் இந்த உப்பு. வீட்டின் பிரதான வாசலில் உப்பு மூட்டையை தொங்கவிட்டால் வீட்டில் இருப்பவர்களின் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும் என்பது வாஸ்து நிபுணர்களின் நம்பிக்கையாகும்.
அது உண்மையில் உதவுகிறதா என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
உப்பை கட்டி தொங்க விடுவது ஏன்?
வாஸ்து சாஸ்திரத்தில், உப்பு எதிர்மறை ஆற்றலை அழிக்கும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. உப்புக்கு எதிர்மறையை அழிக்கும் அபார சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
வீட்டின் பிரதான நுழைவாயிலில் ஒரு மூட்டை உப்பை தொங்கவிட்டால், அது எதிர்மறையை அகற்றி, வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் எனவும் சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கிரக தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்களும் நீங்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் உப்பு சுக்கிரன் கிரகத்துடன் தொடர்புடையது என்பதால், வீட்டின் பிரதான வாசலில் உப்பைக் கட்டுவது திருமண பிரச்சனைகளையும் நீக்குகிறது.
செல்வம் பெருகி வறுமை நீங்க வீட்டில் உப்பை கட்டி தொங்க விடலாம். பணம் தொடர்பான பிரச்சனைகள் மறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |