உயிர் பற்றின ரகசியம்
மருத்துவ உலகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்து இருந்தாலும் அவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாத பல உண்மைகளில் ஒன்றுதான் உடலில் உயிர் என்ன செய்கிறது என்பது.
உடலை பாதுகாக்க உடலுக்குள் பல நுட்பமான சுரப்பிகள் பல உள் உறுப்புகள் உள்ளன? இவையெல்லாம் என்ன வேலை செய்கின்றன?
இந்த கேள்விக்கான பதில் நம்மை இன்னொரு திசைக்கு அழைத்து செல்கின்றது.
நோய் எப்படி ஏற்படுகின்றது?
உடலில் ரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம் என மூன்றும் உடல் முழுதும் ஓடிக்கொண்டு உள்ளது. இதில் ஏதும் தடை ஏற்பட்டால் அங்கு Short Circuit அதாவது மின் தடை ஏற்படுகின்றது.
உங்கள் கையை இன்னொரு கையால் இறுக்கி பிடியுங்கள். இப்பொது ரத்தம் ஓடுவது தடைபடுகின்றது இரண்டு பக்கமும் இரத்தம் ஓடுவதற்காக தயாராக இருக்கின்றது.
இந்த அழுத்தம் காலத்தாலும், அதாவது அதிக நேரம் பிடித்த படியே இருந்தால்., இடத்தாலும் அதாவது கையை பிடித்திருக்கும் பகுதியின் அழுத்தம் இன்னும் அதிகரித்தாலும் அது நோய் என்று அழைக்கப்படுகின்றது.
புரியும் படி சொல்ல வேண்டுமானால்
உங்களுக்கு அடிபட்டது என்றால் அங்கு ஒரு மின் குறுக்கு ஏற்பட்டு உள்ளது என்று அர்த்தம். அந்த அடி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறுகின்றது ஏன் என்றால் அங்கேயே ஒரு வெட்டு பகுதி உள்ளது ரத்தம் ஓட்டம் தடைபட்டதால் வெளியேறுகின்றது., இது தான் நோய் என்பது
இதனை சரி செய்ய மூளைக்கு சக்தி போதாது எனவே தலைக்கு உள்ளே இருக்கும் தலைமை செயலகத்தில் உடனடியாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும், இந்த உடலை என் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வா என்று.
அதனால் தான் பலமான அடி பட்டால் உடனே மயக்கம் வருகின்றது, இந்த மயக்க நிலையில் உடலின் முக்கால் வாசி ஆற்றல் அடிபட்ட இடத்திற்கான சரி செய்யும் பணியினை செய்கின்றன, இதுவே தான் தூக்கத்திலும் நடக்கின்றது.
நீங்கள் எப்போதெல்லாம் செயலிழக்கப்படுகின்றிரோ அப்போதெல்லாம் உங்கள் உடல் தன்னைத்தானே சரி செய்ய துவங்குகின்றது.
உங்கள் காயத்தை சரி செய்யும் அளவு உடலில் சக்தி இல்லை என்றால் இருப்பு நிலை அதாவது Bike ல் Petrol தீர்ந்து விட்டால் Reserved ல் இருந்து எடுத்துக்கொள்ளும் அல்லவா அது போலவே உடலால் சரி செய்ய முடியவில்லை என்றால் கருமையத்தில் இருக்கும் உயிர் சக்தியில் இருந்து ஆற்றல் எடுக்கப்படும்.
அதிலும் சரி செய்ய முடியாத நோயானால் பிரபஞ்சத்திடம் பொறுப்பை விட்டுவிடும் இந்த நிலையானது மரணம் என்று அழைக்கப்படுகிறது
உடலில் ஓடும் உயிரை காந்தம் என்பார்கள் அது ஜீவன் அதாவது உடம்பினுக்கு உள் ஓடுவதால் சிவகாந்தம் என்றும் உடல் இல்லாமல் எங்கும் நிறைந்து இருப்பது வான் காந்தம் என்றும் மகரிஷி குறிப்பிடுவார்
சிவகாந்தம் உயிரினத்தில் சீர்குலைந்தால், தடைப்பட்டால் மின்குறுக்காம் சிக்கலே வலிதுன்பம் சாவு
இவை விரும்பிச் செய்தால் பழிச்செயல் ஆம்.
- வேதாத்திரி மகரிஷி
மின் குறுக்கினை விரும்பி செய்தால் பழிச்செயல் என்று கூறுகிறார் நாம் நாம் உடலை போதைகளுக்கு உட்படுத்துவத்தை தான் அப்படி குறிப்பிடுகின்றார்.
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனேகூறினார்
என கூறினார் திருமுலர்
இந்த உடம்பை பாவச்சுமை, இழுக்கானது என நினைத்திருந்தேன். இந்த உடம்பில் பரம்பொருள் இருப்பதை அறிந்தேன். உடம்புக்குள் உத்தமனாகிய பரம்பொருள் கோயில் கொண்டிருப்பதால், உடம்பினைப் பேணிப் பாதுகாத்து வருகிறேன் என்கிறார்.
நம் உடம்பை நல்லபடியாக வளர்த்து, பேணிப் பாதுகாத்தல் அவசியம். ஏனெனில் அது இறைவன் வசிக்கும் இடம்.
உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
தங்கும் விடுதிகள் பல பெயர்களில் இருந்தாலும் அதனை பொதுவாக Lodge என அழைக்கிறோம் அல்லவா
உணவு உண்ணும் இடத்தின் பெயர் விதவிதமாக எத்தனை இருந்தாலும் பொதுவாக Hotel என்றல்லாவா சொல்கிறோம்
இடம் எப்படி இருந்தாலும் எந்த பெயரை சூட்டி இருந்தாலும் அதன் பொதுவான உருவாக்க நோக்கம் கொண்டு அதனை அழைப்பதை போலவே
நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர் கொண்டது
உடம்பை வளர்ப்போம்...உயிர் வளர்ப்போம்...' அதுவே திருமூலர் நமக்கு வலியுறுத்திச் சொல்லும் திருமந்திரம்
இந்த உயிர் கூட கடவுள் இல்லை உயிருக்கு மூலப்பொருளாகா ஒன்று உள்ளது அது தான் கடவுள் அதனை பற்றி இன்னொரு பதிவில் காண்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |