இந்த தேதியில் பிறந்த பெண் உங்க மருமகளா? மாமியாரை அம்மாவா பாத்துப்பாங்களாம்
எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்த பெண்கள் மாமியாரை அம்மா போன்று பார்த்துக் கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீட்டில் மாமியார் மருமகள் என்றால் ஒத்துப் போகாமல் சண்டையாகவே இருக்கும். இவை பெரும்பாலான வீடுகளில் இருக்கும் பிரச்சனை ஆகும்.
ஆனால் சில குடும்பங்களில் மாமியாரை அம்மா போன்று பார்க்கும் மருமகள்களும், மருமகளை மகள் போன்று பார்க்கும் மாமியார்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
அந்த வகையில் எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது மாமியாரை அம்மாவைப் போல நேசிப்பார்கள். அவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்.
3, 12, 21 மற்றும் 30 தேதிகள்
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே நல்ல குணம் கொண்டவர்கள் இவர்கள் தங்களது மாமியாரை ரொம்பவே மதிப்பார்கள்.
முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் செல்வாக்கின் காரணமாக தங்களது புகுந்த வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதுடன், அம்மா போன்று பார்த்துக் கொள்வார்கள்.
இந்த தேதிசியில் பிறந்த பெண்கள் அமைதியானவராகவும், குடும்பத்தை பொறுப்புடன் கவனித்துக் கொள்பவராகவும் இருப்பார்கள்.
தனது நன்நடத்தையால் மாமியாரின் இதயத்தில் எளிதில் இடம் பிடிப்பதுடன், குடும்பத்தில் உள்ள அனைவரும் இவர்களை நேசிக்கவும் செய்வார்கள்.
தங்களது புகுந்து வீட்டிற்கு செல்வம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வருவார்கள்.
மிகவும் நேர்மையானராகவும், அமைதியான குணம் கொண்டவராகவும் இருப்பதுடன், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சண்டையும் போட மாட்டார்களாம்.
ஒருவேளை சிறிய சண்டைகள் வந்தாலும் கூட அதை சமாளித்து விடுவார்கள். இவர்கள் குடும்ப மகிழ்ச்சியாக இருப்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







