தினம் ஒரு திருவாசகம்
1.நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிதின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
விளக்கம்:
திருவைந்தெழுத்து என்பது தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என முத்திறப்படும்.
நகரத்தை முதலாக உடையது (நமசிவாய) தூலம் சி’கரத்தை முதலாக உடையது (சிவாயநம) சூக்குமம் அதிசூக்குமம் நகர மகரங்களின்றிச் சிகரத்தை முதலாகவுடையது (சிவாய).
இங்குத் தூலவைந் தெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உயிர்களுக்கு உலக இன்பத்தைக் கொடுத்துப் பக்குவப்படுத்துவது.
இனி, இறைவனது திருமேனியே திருவைந்தெழுத்தாகும் நகரம் திருவடியாகவும், மகரம் உடலாகவும், சிகரம் தோளாகவும், வகரம் முகமாகவும், யகரம் முடியாகவும் சாத்திரம் கூறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |