சரிந்த நிலையில் காட்சி கொடுக்கும் சிவபெருமான்
ராமகிரி தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு வாலீஸ்வரர் என்ற பெயர்.
காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு லிங்கத்தை ஆஞ்சநேயர் எடுத்துச் சென்றபோது காலபைரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிறகு மீண்டும் இந்த லிங்கத்தை இங்கிருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஞ்சநேயர் எவ்வளவோ முயற்சிகள் செய்தார்.
ஆஞ்சிநேயர் தன்னுடைய வாலால் அதிக சக்தி கொண்டு இந்த லிங்கத்தை எடுக்க முயற்சி செய்தும் அந்த லிங்கம் அசைய வில்லை.
அதற்கு பதிலாக அந்த லிங்கம் கொஞ்சம் சரிந்து நிலையில் காட்சி கொடுத்தது.பலம் மிகுந்த நம்மால் கூட லிங்கத்தை அசைக்க முடிவில்லை.
இறைவன் இங்கயே அருள்பாலிக்க விரும்புகின்றார் என்று ஆஞ்சநேயர் தனது முயற்சியை கைவிட்டார்.
அந்த லிங்கம் இப்போது வடக்கு திசையை நோக்கி சரிநிலையில் பக்தர்கள் காண முடியும்.
இந்த லிங்கத்தை வழிபடும் பொழுது வாழ்க்கையில் மன உறுதி ஏற்படும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |