சுயம்புவாக உருவான மிக சக்தி வாய்ந்த 'வாராகி அம்மன்'

By Sakthi Raj Jun 12, 2024 05:42 AM GMT
Report

சமீபத்தில் வராஹி அம்மன் வழிபாடு அதிகம் நம்மால் பார்க்கமுடியும்.மேலும் வராஹி அம்மன் கோயில் ஒரு சில இடங்களிலே இருக்கிறது.

அப்படியாக உலகின் பழமையான சிவன் கோவிலான உத்திரகோசமங்கை கோவில் அருகே சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் வராஹி அம்மனை பற்றி பார்ப்போம்.

சுயம்புவாக உருவான மிக சக்தி வாய்ந்த

காசி, தஞ்சாவூர் , உத்திரகோசமங்கை இந்து மூன்று இடங்களில் மட்டும் தான் இந்தியாவில் வராஹி அம்மனுக்கு கோயில் உள்ளது.

அதிலும் இந்த உத்திரகோசமங்கை வாராகியே மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். இவரை ஆதிவாராகியம்மன் என்றழைக்கப்படுகிறார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய சில அதிசிய தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய சில அதிசிய தகவல்கள்


மாணிக்கவாசகர் தன் திருவெண்பாவையில் இந்த வாராகி அம்மனை பற்றி பதிவு செய்துள்ளார். இங்கிருக்கும் வாராகியை ‘மங்கல மஹாகாளியம்மன்’ என்றும் ஆதிவாராகி என்றும் அழைக்கிறார்கள். பன்றி முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சித்தருபவர் வாராகி அம்மன்.

இவர் சப்தகன்னிகளுள் ஒருவர். இவர் திருமாலின் வராக அம்சமாக பார்க்கப்படும் அம்மன். இந்த கோவில் வளாகத்தில் நிறைய அம்மிக்கல் இருக்கின்றது.

அங்கிருக்கும் குளத்தில் நீர் எடுத்து வந்து அம்மிக்கல்லை சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு பூசிவிட்டு அவரிடம் இருக்கும் மஞ்சளை வாங்கி சாப்பிட்டு தங்கள் வேண்டுதலை வாராகி அம்மனிடம் வைக்கிறார்கள்.

சுயம்புவாக உருவான மிக சக்தி வாய்ந்த

நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வாராகி அதை நிறைவேற்றுகிறார். இங்கிருக்கும் குளத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ராமநாதபுரம் மிகவும் வறட்சியான பகுதி என்று அனைவரும் அறிந்ததே.அப்படியாக இக்கோயிலில் உள்ள இந்த குளம் மட்டும் வற்றாமல் காணப்படுகிறது. எல்லா நட்களிலும் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் கருப்பு ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.

இவர் போர்க்கடவுள் என்பதால், வராகி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US