கார்த்திகை அமாவாசையில் பாவங்கள் விலக 12 ராசிகளும் செய்ய வேண்டிய தானங்கள்
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் ஒளி நிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாட்களுமே மிகச்சிறந்த நாட்கள் என்றாலும் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசை நவம்பர் 19 மற்றும் நவம்பர் 20 ஆகிய இரண்டு நாட்களுமே இருப்பதால் இந்த இரண்டு நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் தானங்கள் வழங்கி வழிபாடு செய்வதற்கு மிகச்சிறந்த நாளாக இருக்கிறது.
மேலும் இந்த நாட்களில் புனித நீர்களுக்கு சென்று நீராடி தானம் வழங்கினால் நம்முடைய பாவங்கள் தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. அதோடு இந்த கார்த்திகை அமாவாசை நாட்களில் நாம் குறிப்பிட்ட சில பொருட்களை தானம் செய்தால் நமக்கு மிகச்சிறந்த பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
அந்த வகையில் 12 ராசிகளும் கார்த்திகை அமாவாசையில் என்ன தானம் செய்தால் அவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் சிவப்பு நிறத்தில் ஆடைகள் போர்வைகள் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
ரிஷபம்:
மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு நீங்கள் முடிந்த அளவிற்கு பண உதவிகள் செய்தால் உங்களுக்கு நற்பலன் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் குளிருக்கு இதமாக இருக்கக்கூடிய கம்பளி போன்ற பொருட்களை ஏழைகளுக்கு தானம் வழங்கினால் கஷ்டங்கள் விலகும்.
கடகம்:
இவர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய அரிசி அல்லது சமைத்த உணவுகளை பிறருக்கு தானமாக வழங்குவதால் பொருளாதார கஷ்டம் விலகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் வெல்லம், தேன், வெள்ளை கொண்டக்கடலை ஆகியவற்றை தானம் வழங்கினால் நல்ல பலன்களை இவர்கள் பெறுவார்கள்.
கன்னி:
கன்னி ராசியினர் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களை இவர்கள் தானம் வழங்கலாம். அதாவது பாசிப்பயிறு போன்ற உணவுகளை இவர்கள் நெய்க்கலந்து சமைத்து அதை தானமாக வழங்குவதால் சிறப்பான பலன்களை பெறுகிறார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதோடு ஏழைகளுக்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை இவர்கள் தானமாக வழங்க வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் சிவப்பு நிறத்தில் ஆடையை பிறருக்கு தானமாக வழங்குவதால் நல்ல பலன்களை பெறுகிறார்கள்.
தனுசு:
தனுசு ராசிக்கு இனிப்புகள் மற்றும் வாழைப்பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஆடைகள் ஆகியவற்றை இவர்கள் தானமாக வழங்க வேண்டும்.
மகரம்:
கருப்பு உளுந்து எள் போன்றவற்றை இவர்கள் தானம் செய்வதால் மகிழ்ச்சி இவர்களுக்கு உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியினர் ஏழைகளுக்கு பணம் மற்றும் காலணிகளை இவர்கள் தானமாக வழங்குவதால் தடைகள் யாவும் விலகும்.
மீனம்:
மீன ராசியினர் குளிருக்கு இதமான கம்பளி மற்றும் மஞ்சள் நிற உணவு பொருட்களை இவர்கள் தானம் செய்வதால் பொருளாதார கஷ்டம் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |