நீங்கள் மகர ராசியா? உங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை எப்பொழுதும் செய்யாதீர்கள்

Report

 ஜோதிடத்தில் சனிபகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மகர ராசியினர் கடும் உழைப்பாளிகள். பிடிவாத குணம் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை நினைத்து விட்டால் அதை சாதிக்கும் வரை இவர்கள் ஓய்வதில்லை.

அப்படியாக, இவர்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சில விஷயங்களை செய்வதை தவிர்த்தால் இவர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெறலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். மகர ராசியை பொறுத்த வரை இவர்கள் புதிய காரியங்களை தொடங்குவதற்கு செவ்வாய் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர்ப்பது நல்லது.

இவர்கள் முடிந்தவரை ரியல் எஸ்டேட், பாறைகளை உடைத்தல் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் சார்ந்த தொழில்களை இவர்கள் தவிர்ப்பது நல்லது. மருத்துவ துறையில் பணிபுரிபவர்கள் அதை ஒரு சேவையாக மட்டும் செய்ய வேண்டும்.

தனுசு ராசியினர் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யவே கூடாதாம்

தனுசு ராசியினர் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யவே கூடாதாம்

எப்பொழுதும் அதை ஒரு வணிகமாக இவர்கள் மாற்றக் கூடாது. இவர்கள் யாருக்கும் எளிதாக நான் இதை செய்து முடிக்கிறேன் என்ற ஒரு வாக்குறுதியை கொடுக்க வேண்டாம். அப்படி வாக்குறுதி கொடுத்து விட்டால்அதை உடனடியாக இவர்கள் செய்து முடிக்க வேண்டும்.

இவர்கள் எப்போதும் தண்ணீரை வீணாக செலவழிக்க கூடாது. இது இவர்கள் செல்வத்தை இழக்க நேரிடும். இவர்கள் எப்பொழுதும் சிவப்பு மற்றும் பச்சை நிற ஆடைகள் அணிவதை தவிர்த்து விட வேண்டும்.

அதேபோல், மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசியினர் இடையே இவர்கள் நெருக்கமான உறவுகள் வைத்திருப்பதையும் இவர்கள் தவிர்த்து விட வேண்டும். மேலும், இவர்கள் வாழ்க்கையில் என்ன விஷயங்களை செய்யலாம் செய்யக்கூடாது என்று விரிவாக இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US