தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு-கட்டாயம் பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்
முருகப்பெருமானின் முக்கிய விஷேங்களில் தைப்பூசம் நிகழ்வு உள்ளது.வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசம் வரவிருக்கிறது.இந்த முக்கியமான விஷேசத்திற்கு பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்கின்றனர்.அதாவது ஒரு சில பக்தர்கள் 48 நாட்கள் முன்பாகவே விரதம் இருந்து வழிபாட்டை தொடங்கிவிட்டார்கள்.
சிலர் 21 நாட்கள் முன்னதாகவும் இன்னும் சிலர் தைப்பூசம் திருநாள் அன்று மட்டும் விரதம் இருந்து தங்களுடைய வழிபாட்டை செய்வார்கள்.அப்படியாக இந்த தைப்பூசம் திருநாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் குறிப்பிட்ட முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.அவை என்னவென்று பார்ப்போம்.
பொதுவாக விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது உடலும் மனமும் சுத்தமாக இருக்கவேண்டும்.மனதில் எந்த வித விரோதமும் தீய எண்ணங்களும் இருக்கக்கூடாது.அப்படியாக விரதம் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் விரதத்தை துவங்குவதற்கு முன்பாக பஞ்சகவ்யம் என்று சொல்லப்படும் தீர்த்தத்தை குளிக்கும் நீரில் கலந்து குளிக்க உடலும் மனமும் சுத்தமாகும்.
நம்முடைய மனதில் நேர்மறை எண்ணம் உருவாகும். உங்களிடம் நியாயம் இருக்க அது நிச்சயம் ஜெயித்திட முருகனை முறையாக வழிபாடு செய்து நிதி கிடைக்க வழிபாடு செய்யலாம்.ஆனால் உங்களிடம் நியாயம் இல்லாமல் மனதில் வீண் வன்மம்,பொறாமை எண்ணத்துடன் நீங்கள் முருகனை வழிபாடு செய்தால் கட்டாயம் அந்த கெட்ட எண்ணத்திற்கு முருகப்பெருமான் உங்களுக்கு தக்க தண்டனை கொடுப்பார்.
அதே சமயம் விரதம் மேற்கொள்பவர்கள் பிறரிடம் பேசுவதை குறைத்து கொள்வது நல்லது.அதாவது விரதம் இருக்கும் நாட்களில் ஆவது ஒரு மணி நேரம் சற்று அமைதியாக தியானம் செய்து “ஓம் சரவணபவாய நமஹ” என்ற மந்திரத்தை மட்டும் இடைவிடாது சொல்லி வர உங்கள் வாழ்வில் முருகன் அருளால் நிச்சயம் நல்ல மாற்றம் நிகழும்.
நம்பிக்கையால் ஜெய்திட முடியாத விஷயம் என்று எதுவும் இல்லை.ஆக கலியுக வரதனை நீங்கள் முழுமனத்தாரா வேண்டிட உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் இருக்கும்.அதோடு நீங்கள் நினைத்த வேண்டுதலும் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |