புது வருடத்தில் இந்த பொருட்களை வீட்டில் வைக்காதீங்க - வாஸ்து
வாஸ்து சாஸ்திரப்படியும், இந்து சாஸ்திர முறைகளின்படியும் சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
காரணம் இந்த பொருட்களை தொடர்ந்து வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அத்துடன் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான செல்வங்கள் ஒன்றும் நமக்கு கிடைக்காது என கூறப்படுகின்றது.
அப்படியான பொருட்கள் என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

வைக்க கூடாத பொருட்கள்
வாடிய துளசி செடிகள் : வாஸ்து சாஸ்திரப்படி வாடிய துளசி செடியை வீட்டில் வைப்பது நல்லதல்ல. காரணம் அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என நம்பப்படுகிறது. அதிலும் காய்ந்த அல்லது வாடிய துளசி செடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.
வீட்டில் லட்சுமி கடாட்சத்தை தடுக்காமல் இருக்க துளசிச் செடிகளை நன்றாக வளர்க்க வேண்டும். துளசி செடிகள் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், வாடிய செடிகளை எடுத்து விட்டு அந்த இடத்தில் புதிய செடிகளை வைக்க வேண்டும்.
இந்த செடிகளை வீட்டின் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பது மிகவும் மங்களகரமானது. துளசி செடியை வீட்டில் உள்ள கழிவறைகள் அல்லது குளியலறைக்கு அருகில் வைக்க வேண்டாம்.

சேதமுற்ற கடவுள் படங்கள் அல்லது சிலைகள் : சேதமடைந்த கடவுள் படங்கள் அல்லது சிலைகளை வீட்டில் வைப்பது முற்றிலும் நல்லதல்ல. அவை வீட்டில் எதிர்மறை சக்தியை உண்டாக்கி, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கும்.
மேலும் வீட்டில் வைத்திருக்கும் பழைய மற்றும் கிழிந்த படங்கள் மற்றும் உடைந்த சாமி சிலைகளில் தெய்வ சக்தி இருக்காது இதை வைத்து வணங்குவதும் பயன் இல்லை. இந்த விடயத்தை தவிர்த்து புதிய படத்தை வாங்குவது நல்லது.

விரிசல் விட்ட பாத்திரங்கள் : இந்த பாத்திரங்களை சமையலுக்கோ அல்லது உணவு பரிமாறவோ பயன்படுத்தக் கூடாது. இத்தகைய பாத்திரங்கள் வீட்டில் இருந்தால் அன்னபூரணியின் அருளை குறைத்து வீட்டில் வறுமையை உண்டாக்கும்.
விரிசல் பாத்திரங்கள் உடைந்த பாத்திரங்களை வீசி விட்டு புதிய பாத்திரங்களை கையாள்வது நல்லது.
தேய்ந்து போன துடைப்பம் : வாஸ்து சாஸ்திரத்தின்படி, துடைப்பம் தேயத் தேய வீட்டில் உள்ள செல்வமும் தேயும். அந்த துடப்பம் உடைய முன்னர் புதிய துடப்பம் வாங்க வேண்டும்.
அதேபோல் பழைய, உடைந்த துடைப்பத்தை வாசலில் படுக்க வைப்பது, மகாலட்சுமிக்கு அவமரியாதை செய்வது போலாகும் இதன் காரணமாக செல்வம் தங்காது.

எனவே தேய்ந்த துடைப்பத்தை உடனே மாற்றி புதியதை வாங்கி, அதை வாஸ்துப்படி சரியான இடத்தில் வைப்பது அவசியம். புதிய துடைப்பத்தை வீட்டின் ஒரு மூலையில், வாசலை அடைக்காதவாறு, மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வைக்க வேண்டும்.
கிழிந்த பழைய கால் மிதியடி : கிழிந்த பழைய கால் மிதியடி எப்படி அழுக்கை வீட்டிற்குள் நுழைய விடுமோ அதேபோல் எதிர்மறை ஆற்றலையும் வீட்டின் உள்ளே நுழைய விடும்.
அது எதிர்மறை ஆற்றலை (Negative Energy) ஈர்க்கும், செல்வ வரவைக் குறைக்கும், புதிய வரவுகளைத் தடுக்கும் என்பதால், அதை உடனடியாக அப்புறப்படுத்துவது நல்லது. பழைய மிதியடி போன்ற சேதமடைந்த பொருட்கள் வீட்டிற்குள் இருப்பது மங்களகரமானது இல்லை.