வாஸ்து: 2026-ல் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பொருளாதார சிக்கல் உறுதி
ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் நம் முன்னோர்கள் நிறைய அனுபவங்கள் வழியாக நமக்கு கொடுத்த படங்களை எப்பொழுதும் சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. காரணம் அவர்கள் தங்களுடைய அனுபவங்கள் வழியாக நமக்கு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான சில ஆலோசனையை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அந்த வகையில், கடந்த காலங்களில் நாம் வாஸ்து ரீதியாக சில விஷயங்களை கடைபிடிக்க முடியாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டாவது நிச்சயம் நம்முடைய பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும், இருக்கின்ற பொருளாதாரத்தை நல்ல நிலையில் தக்க வைத்துக் கொள்ளவும் வாஸ்துரீதியாக எந்த விஷயங்களை நாம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

1.வாஸ்து உறுதியாக வடக்கு திசை என்பது செல்வத்தையும் நமக்கு மன மகிழ்ச்சியான வாழ்க்கையும் கொடுக்கக்கூடிய ஒரு திசையாக இருக்கிறது. நம்முடைய வீடுகளில் எந்த வேளையிலும் அழுக்காகவும் அதை பாழடைந்த நிலையிலும் வைத்திருக்கக் கூடாது.
அதோடு இந்த தெற்கு திசையில் பயன்படுத்தாத பொருட்களை வைத்திருந்தால் நிச்சயம் அது நம்முடைய பொருளாதாரத்தில் ஒரு பின்னடைவை கொடுத்து விடும்.
2. ஒரு வீட்டில் நுழைவாயில் என்பது மிகவும் முக்கியமானது. பொருளாதார ரீதியாக ஒரு சிலருக்கு அந்த நுழைவாயில் எனக்கூடிய வாயிற் கதவுகளை சரியாக பராமரித்து வைக்கக்கூடிய நிலையில் இருக்கும்.
இருப்பின் பொருளாதாரத்தில் இப்பொழுதுதான் ஏற்றத்தை தொட்டுக் கொண்டிருக்கின்ற நபர்களிடத்தில் சில நேரங்களில் அவர்களுடைய வீடுகளை உடைந்த கதவுகளை பராமரிக்க சில காலதாமதங்கள் வரலாம்.
இருந்தாலும் அவர்கள் அதற்கு கவலை கொள்ளாமல் நுழைவாயிலில் எப்பொழுதும் மங்களகரமாக இருப்பதற்கு வீடுகளில் தூபம் போடும் பொழுது நுழைவாயிருக்கும் நாம் போட வேண்டும். நுழைவாயில் கதவுகளை நாம் தூசி படிந்த படி எப்பொழுதும் வைத்திருக்கக் கூடாது. இதுவும் நமக்கு எதிர்மறை ஆற்றலை பெற்றுக் கொடுக்கும்.

3. மேலும், வாஸ்து ரீதியாக பொருளாதாரத்திற்கும் நாம் ஒரு வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்று சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. நாம் வாழ்கின்ற இடத்தில், இருக்கின்ற பொருட்களை கொண்டு எவ்வளவு தூரம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள பழகும் பொழுது அந்த அளவிற்கு நம்முடைய ஆரோக்கியமும், அன்றாட வாழ்க்கையில் வரக்கூடிய பொருளாதாரமும் சிறப்பாக அமையும்.
ஆக, நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற இடத்தில் தேவை இல்லாத பொருட்களை அகற்றிவிட்டு உடுத்துகின்ற உடையை தினமும் நன்றாக துவைத்து, இருக்கின்ற இடத்தை சுத்தமாக வைத்தும் வாழ்ந்தால் நிச்சயம் வாஸ்து ரீதியாக நல்ல பலனை பெற்று விடலாம்.
இதைவிட முக்கியமாக நம்மை சுற்றி தூசியும், குப்பைகளும் சரியான சூழலும் இல்லாத நேரத்தில் நம்முடைய மூளையும் சரியாக இயல்படாத நிலைக்கு சென்று விடும். அதனால் இருப்பதை வைத்து அழகாக வாழ கற்றுக் கொண்டோம் என்றால் நம்முடைய நேர்மறை ஆற்றல் கூட எதிர்மறையாக இருக்கின்ற வாஸ்துவை சரி செய்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |