இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் வறுமை உண்டாகும்
ஜோதிட சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பிரச்சனைகளை சில அறிகுறிகள் கொண்டு காண்பித்து விடும்.மேலும் சுத்தமான வீட்டில் தான் மஹாலக்ஷ்மி தங்குவாள் என்பதற்கு பல காரணம் உள்ளது.சுத்தமான என்பதற்கு பின்னால் வீட்டை துடைத்து சுத்தம் செய்வதை தாண்டி வீட்டில் இருக்கும் பொருட்களை அவை குறிக்கிறது.
அப்படியாக நம்முடைய வீட்டில் மறந்தும் இந்த பொருட்களை வைக்க கூடாது.வைத்தால் வீட்டில் வறுமை மற்றும் எதிர்மறை எண்ணம் உருவாகும்.அதை பற்றி பார்ப்போம்.
வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் அதில் நம்முடைய பங்கு அதிகம்.அதாவது வீட்டோடு சேர்த்து நம் உடலையும் மனதையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.அதில் முக்கிய பங்காக நகம்,முடி வெட்டுதல் அடங்கும்.
அப்படியாக இவை வெட்டுவதற்கு உகந்த நாள் நேரம் உள்ளது.அதாவது மறந்தும் ஒருவர் வியாழன் மற்றும் ஏகாதசியில் முடி நகம் வெட்ட கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் நிதி நெருக்கடிகள் உண்டாக்கும்.
தண்ணீர் நமக்கு மிகவும் தேவையான ஒன்று.வீடுகளில் தண்ணீரை ஒரு பொழுதும் வீண் செய்ய கூடாது.அதாவது சமயங்களில் வீட்டில் தண்ணீர் குழாய் சரி இல்லாமல் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டு இருக்கும்.
அதை நாம் முதலில் சரி செய்யவேண்டும்.அவ்வாறு தண்ணீர் வீணாகுவது வீட்டில் பல குழப்பங்கள் பிரச்சனைகள் உருவாக்கும்.
அதே போல் வீட்டில் பழுது அடைந்த எலக்ட்ரிக் பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.அது இருக்கும் பொழுது வீட்டில் எதிர்மறை எண்ணம் உருவாகும்.
மிக முக்கியமாக சிலர் விலையுர்ந்த செருப்புகள் வாங்கிவிடுவார்கள்.சமயத்தில் அது கிழிந்து விட்டால் உடனே தூக்கி எரிய வேண்டும்.ஆனால் பலருக்கும் அது வெளியே தூக்கி போட மனசு வருவதில்லை.உண்மையில் கிழிந்த செருப்புகள் வீட்டில் இல்லாமல் இருப்பது தான் நன்மை தரும்.
இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்.அதனால் அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட கூட அவகாசம் இருப்பது இல்லை.அந்த நிலையில் அவர்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்ய தவறி விடுவார்கள்.
நேரம் கிடைக்கும் பொழுதும் அவர்கள் கோயிலுக்கு சென்று வருவதில்லை.இவ்வ்வாறு செய்யும் பொழுது எ அவர்கள் வீட்டில் சந்தோஷமின்மை,திடீர் இழப்புகள்,வறுமை போன்ற சூழல் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |