சூரியனின் ஆட்டம் ஆரம்பம்-வெற்றிகளை குவிக்க போகும் ராசிகள்
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். ஒரு மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றி கொள்வார்.அவருடைய இடமற்றதால் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகள் உண்டாகும்.மேலும் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்கிறார்.
இந்த சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றோரு ராசிக்கு செல்லும் பொழுது தான் தமிழ் மாதம் பிறக்கின்றது. இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.அன்றைய தினம் கார்த்திகை மாதம் பிறந்தது.
சூரிய பகவானின் விருச்சிக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
கடக ராசியில் சூரிய பகவான் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார்.இதனால் இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உருவாகும்.மந்த நிலையில் காணப்பட்ட தொழில் சிறப்பாக அமையும்.உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரி ஆகும்.அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.நீண்ட நாள் வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன் அமையும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியில் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இதனால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.வியாபார காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு பொன்னான காலம் இது.பூர்விக சம்பந்தமான சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
துலாம் ராசி
துலாம் ராசியில் சூரியன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.அதனால் உங்களுக்கு வருமானத்தில் தடை எதுவும் உண்டாகாது.பல நாள் கிடைக்காத வெற்றி கிடைக்கும்.உங்களுக்கு உண்டான அவமானங்கள் சரி ஆகும்.உங்களுக்கான புதிய பாதை கண்டுபிடித்து நீங்கள் வெற்றி அடைவீர்கள்.மாணவர்களுக்கு நினைத்த படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.போட்டி தேர்வுகளில் வெற்றிகள் கிட்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |