அட்சய திருதியை: உங்கள் ராசிக்கு என்ன பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம் தெரியுமா?
இந்துக்கள் கொண்டாட கூடிய முக்கியமான பண்டிகைகளில் அட்சய திருதி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நாளில் நாம் சில முக்கியமான பொருட்கள் வாங்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் சேரும் என்பது நம்பிக்கை. அப்படியாக சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு மூன்றாவது நாள் வரக்கூடிய திருதியை தான் அட்சய திருதியாக கொண்டாடுகின்றோம்.
இந்த மங்களகரமான நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதாவது இந்த தினத்தில் தங்கம் வாங்குவது வீடுகளில் அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது.
அந்த வகையில் அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 12 ராசிக்காரர்கள் என்ன பொருள் வாங்கினால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் புதிய ஆடை அலங்காரப் பொருட்கள் அல்லது வாசனை திரவியங்கள் வாங்குவது நல்ல பலன் அளிக்கும். அதே போல் வீடுகளில் உள்ளவர்களுக்கு பிடித்த பொருட்கள் வாங்கி கொடுப்பதாலும் உங்களுக்கு நன்மைகள் சேரும். நீங்கள் இந்த நாளில் வீடு, மனை, நிலம் வாங்கலாம். ஏழை எளிய மக்களுக்கு துவரம் பருப்பு போன்றவை தானமாகவும் வழங்கலாம்.
ரிஷபம்:
இவர்கள் வீட்டிற்கு பால், உப்பு, வெண்ணெய் போன்ற பொருட்கள் வாங்குவது ஐஸ்வர்யத்தை சேர்க்கும். அதேபோல் அன்றைய தினம் புதிய ஆடை ஆபரணங்கள் தங்க நகைகள் வாங்குவதும் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். இந்த நாளில் முடிந்தவர்கள் பச்சை பயிர் கடலையை தானமாக வழங்கலாம்.
மிதுனம்:
இவர்கள் அட்சய திருதியை நாளில் வெள்ளி பொருட்கள் வாங்கலாம். அதேபோல் புதிதாக சந்தனம் வாங்கி பூஜை அறையில் வைத்தாலும் நல்ல அதிர்ஷ்டம் சேரும்.
மேலும், புதிதாக கணினி மொபைல் போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும் வாங்கினால் நீண்ட நாட்கள் பயனளிக்கும். அதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான கல்வி தொகை அல்லது புத்தகங்களை தானமாக வழங்குவது தடைகளை நீக்கும்.
கடகம்:
இவர்கள் இந்த நாளில் வாகனங்கள் வாங்கலாம். அதை போல் வீடு, மனை வாங்கவும் சிறந்ததாக இருக்கிறது. இந்த நாளில் வெள்ளி பொருட்கள் வாங்குவதும் உங்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்கும். ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் பரிசுப் பொருட்கள் இனிப்புகள் வாங்கி தானம் செய்யும் பொழுது புண்ணியம் சேர்க்கிறது.
சிம்மம்:
இவர்கள் இந்த நாளில் தங்க நாணயம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் பெற்றுக் கொடுக்கும். அதே போல் கோவில்களுக்கு பூஜை பொருட்கள் தானமாக வழங்கலாம். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உளுந்து தானியங்களை தானமாக வழங்குவதால் கெட்ட நேரத்தின் தாக்கம் குறைகிறது.
கன்னி:
இவர்கள் இந்த நாளில் தங்கு ஆபரணங்கள் வாங்கலாம். அதேபோல் ஆயுள் காப்பீடு போன்றவற்றை எடுக்கவும் அட்சய திருதியை சிறந்த நாளாக அமைகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் பிடித்த பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் நன்மை உண்டாகும். ஏழை எளிய மக்களுக்கு கோதுமை, கருப்பு முழு உளுந்தை தானமாக நீங்க கொடுக்கலாம்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்த நாளில் தங்கம் வாங்குவது இவர்களுக்கு மிகச்சிறந்த பலனை பெற்றுக்கொடுக்கும். அதே போல் செம்பு பொருட்களும் வாங்கலாம்.
அட்சயதிருதியை நாளில் வெள்ளை நிற பொருட்கள் வாங்குவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். அதோடு ஏழை எளிய மக்களுக்கு நெல் தானியங்களை தானமாக கொடுக்கலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் புதிய சொத்துக்கள் வாங்குவது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் அல்லது புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு உரிய பணத்தை நீங்கள் எடுத்து வைக்கலாம். தங்கம் வெள்ளி என இரண்டு வாங்குவதும் செல்வம் சேர்க்கும். ஏழை எளிய மக்களுக்கு ஆடை தானம் செய்வதால் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை விலகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இந்த நாளில் அழகு பொருட்கள் வாசனை திரவியங்கள் புதிய ஆடைகள் மற்றும் தங்கம் வாங்கலாம். அதோடு பூஜை அறையை சுத்தம் செய்து அம்பாளை நினைத்து வழிபாடு செய்தால் வீடுகளில் அதிர்ஷ்டம் சேரும்.
இந்த நாளில் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலக துவரம் பருப்பு, எள் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். மேலும், பாய் படுக்கை போன்றவற்றையும் நீங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் எளியவர்களுக்கு தானமாக கொடுப்பதால் பிள்ளைகளுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதியை நாளில் ஆடை அலங்கார பொருட்கள் வெள்ளி நாணயங்கள் வாசனை திரவியங்கள் வாங்குவதால் சிறப்பான பலன் கொடுக்கும். இவர்களை இந்த நாளில் ஆலய திருப்பணிகளுக்கு முடிந்த உதவிகளை செய்யலாம். அதேபோல் வண்டி வாகனம் வாங்கும் பொழுது இவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களை வாங்கலாம். மேலும் இவர்கள் சொத்து மனை வாங்குவதற்கு முதற்கட்ட முயற்சியை எடுப்பது நல்ல பலன் கொடுக்கும். இதனால் இவர்கள் பச்சை பயிறு மற்றும் பச்சை நிற வஸ்திரங்களை வாங்கி கொடுக்கலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதியை நாளில் தங்க ஆபரணங்களை சேர்ப்பது மிகச் சிறந்த பலனை கொடுக்கும். மேலும் இவர்கள் பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்தாலும் சிறந்த லாபத்தை பெறலாம்.
இவர்கள் கலை தொடர்பான பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கினால் நல்ல பலன் கொடுக்கும். அதோடு எள் நல்லெண்ணெய் போன்றவற்ற இவர்கள் தானமாக வழங்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |