இந்த ராசியில் பிறந்தவர்கள் சின்ன விஷயத்திற்கும் கூட பொய் சொல்வார்களாம்.. யார் தெரியுமா?
மனிதர்கள் பல நேரங்களில் பொய் பேச வேண்டும் என்று பேசுவதில்லை. ஆனால் உண்மையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அது அந்த இடங்களில் பொய்யாக மாறிவிடுகிறது.
ஆக, சூழ்நிலையை சமாளிப்பதற்காக மட்டுமே இங்கு நிறைய நபர்கள் பொய் பேசக்கூடிய நிலையை உருவாக்குகிறது. சிலருக்கு அது சாதகமாக அமைந்தாலும் பலருக்கு அது பாதகமாக அமைகிறது. அப்படியாக ஒரு சிலர் ராசியில் பிறந்தவர்கள் சிறிய விஷயத்திற்கு கூட அவர்கள் பொய் பேசக்கூடியவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியை பொறுத்தவரை இவர்கள் எல்லா இடங்களிலும் தானே முதன்மை வகிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதலால், பல நேரங்களில் இவர்களைப் பற்றி புகழ்ந்து சொல்வதிலும் இவர்கள் நிறைய பொய் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது.
மேலும், இவர்களாக சென்று ஒருவரிடத்தில் பேசினால் கலகலப்பாக பேசுவார்கள். ஆனால் நாம் அவர்களை அணுகும் பொழுது அவர்கள் நாம் கேட்ட கேள்விக்கு பல நேரங்களில் அந்த கேள்வியை தவிர்ப்பதற்கு பொய்யான பதில்களை கொடுக்கிறார்கள்.
கன்னி:
கன்னி ராசியினர் ஒரு விஷயத்தை நினைத்து விட்டால் அதை கட்டாயமாக முடிக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள். ஆதலால் இவர்கள் ஒரு காரியத்தை முடிப்பதற்கு எந்த அளவிற்கு பொய் சொல்வதற்கு தயங்க மாட்டார்கள்.
மேலும், இவர்கள் சொல்லக்கூடிய பொய்யானது பல நேரங்களில் உண்மையை போல இருக்கும். காலம் கடந்து இவர்கள் தான் சொன்னது பொய் என்று அவர்களை வந்து சொன்னாலும் அதை நம்ப முடியாது அளவிற்கு இவர்கள் பொய் பேசுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பல நேரங்களில் தங்களை பெருமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும. ஆதலால் இவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தவும் தங்கள் குடும்பத்தை பெறுமையாக காட்டிக்கொள்ளவும் சிறு சிறு பொய்களை இவர்கள் அவ்வப்போது சொல்வதை நான் காணலாம்.
ஆனால், தனுசு ராசியினர் மிகவும் நல்ல எண்ணம் கொண்டவர் என்பதால் இவர்கள் சொல்லக்கூடிய பொய் அந்த நேரத்தில் மறந்து விடுவதால் பல சமயங்களில் இவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |