சந்திர கிரகணத்தில் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட கிரகணம் உலகில் உள்ள சில நாடுகளில் தெரியும் மற்ற நாடுகளில் தெரியாது.
அந்தவகையில், சந்திர கிரகணம் போது கடைபிடிக்க வேண்டிய சில செயல்களை குறித்து விரிவாக காணலாம்.
என்ன செய்யவேண்டும்?
சந்திர கிரகண சமயத்தில் வயிற்றில் உணவு இருக்கக்கூடாது. எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உண்ண வேண்டும். ஏனெனில் இதனால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
சந்திர கிரகணம் விட ஆரம்பித்தவுடன் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்குப் பிரம்யஞ்ஜம் கிடையாது.
கிரகணம் பிடிக்கும் போதும், விட்ட பிறகும் குளிக்க வேண்டும். கிரகண காலத்தில் எல்லா நீர்நிலைகளும் கங்கைக்குச் சமம்.
இந்தக் காலத்தில் நாம் உடுத்தியிருந்த உடைகளை நனைத்து வேறு உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
முடிந்தவரை எல்லா உணவு பண்டங்களிலும், குடிக்கும் நீரிலும் தர்ப்பை ஒன்றைப் போட்டு வைக்கலாம்.
அன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை சந்தி ரோதயம் ஆன பிறகு நிலவைப் பார்த்து விட்டு சாப்பிட வேண்டும். ஆனால் இந்தச் சமயத்தில் தூங்கக் கூடாது.
கிரகணம் ஆரம்பித்து முடியும் வரை ஜபம் செய்யலாம், இறைவன் நாமாவைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இப்படிச் செய்தால் நாம் மிகுந்த பலனை அடையலாம்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது.
கிரகணத்தன்று தெவசம் வந்தால் செய்யக் கூடாது. அதை மறுநாள் செய்யலாம் அல்லது அடுத்த மாதம் அதே திதியில் செய்யலாம்.