100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் சொன்ன வழி
ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அந்த ஆரோக்கியம் சிறப்பாக அமைய, அவர்கள் கட்டாயம் நல்ல உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். இன்னும் முக்கியமாக உடலுக்கு நிகராக மனதையும் பாதுகாக்க வேண்டும்.
மனதை ஒரு நிலை செய்ய தியானம் மற்றும் யோகாசனங்கள் செய்யவேண்டும். இவ்வாறான சில விஷயங்களை பின்பற்றினாலே நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை பெறலாம். இங்கு நாம் எல்லோரும் காலம் கடந்த பிறகே உடலுக்கும் மனதிற்கும் அக்கறை செலுத்துகின்றோம்.
அதை நாம் முன் எச்சரிக்கையாக சிறு சிறு மாற்றங்களை உடலில் சந்திக்கும் பொழுதே கவனித்து அதற்கான தீர்வை பெற்றால் நீண்ட வருடம் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள். மேலும், ஆதிகாலங்களில் வாழ்ந்த சித்தர்கள் நமக்கு வாழ்க்கையை சிறப்பாக வாழ பல அறிவுரைகளை விட்டு சென்று இருக்கின்றனர்.
அவர்கள் சொன்ன உணவு பழக்க வழக்கம், மற்றும் தியானம் செய்து வர நோய் இன்றி மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.
அப்படியாக, நம் வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருக்க எவ்வாறான விஷயங்களை பின் பற்ற வேண்டும் என்று நம்மோடு பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் போகர் வசீகரன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |