புரட்டாசி மாதம் என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது?
புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டுக்குரிய மிக சிறந்த மாதம் ஆகும். பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழி ஆகிறேன் என்று அவர் கூறுகிறார். அந்த மார்கழி மாதத்திற்கு இணையான அற்புதமான மாதம் இந்த புரட்டாசி மாதம் ஆகும். மேலும் இந்த புரட்டாசி மாதம் பக்தர்கள் அசைவ உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
விரதம் இருந்து பெருமாளை மட்டும் நினைத்து வழிபாடு செய்வார்கள். அப்படியாக புரட்டாசி மாதத்தில் நாம் சில விஷயங்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். பொதுவாக புரட்டாசி மாதத்தில் எந்த ஒரு சுப காரியங்களும் செய்ய மாட்டார்கள்.
அதாவது திருமணம் என்று எடுத்துக் கொண்டால் அதை சித்திரை வைகாசி, ஆவணி தை, பங்குனி ஆகிய மாதங்களில் செய்வது சிறப்பாகும். இந்த மாதங்களில் திருமணம் செய்யும்பொழுது மண மக்கள் மகிழ்ச்சியாகவும் வளமை பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதேபோல் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள்.
பொதுவாக நமது நாட்காட்டியில் வாஸ்து நாள் என்று ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது ஆணி புரட்டாசி மாதம் ஆகிய நான்கு மாதங்களில் வாஸ்து நாளை நாம் பார்க்க முடியாது. ஆதலால் அந்த நான்கு மாதங்களில் வீடு கிரகப்பிரவேசம் வாஸ்து பூஜை செய்வதில்லை.
வாடகை வீடாக இருந்தாலும் கூட புது வீட்டிற்கு அவர்கள் குடி போவதில்லை. ஆனால் வீடு ஏற்கனவே கட்ட தொடங்கி விட்டார்கள் என்றால் அந்த மாதத்தில் அந்த பணிகளை தொடரலாம், அதோடு இந்த புரட்டாசி மாதம் என்பது பெருமாளை வழிபாடு செய்யவும் நம்முடைய முன்னோர் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு மிக சிறந்த மாதமாக இருக்கிறது.
ஆதலால் இந்த மாதங்களில் பெருமாள் வழிபாட்டிற்கும் முன்னோர்களுக்கு மட்டும் நம்முடைய நேரத்தை ஒதுக்கி நமக்கான கடமைகளை செய்ய வேண்டும் என்பதற்காக சுப காரியங்களை நாம் இந்த மாதத்தில் செய்வதில்லை இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







