எந்த திதியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? முழுமையான விவரங்கள் இதோ

By Sakthi Raj Jun 29, 2026 10:30 AM GMT
Report

நம்முடைய இந்து மத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சூரிய பகவானுக்கும் சந்திர பகவானுக்கும் இடையில் இருக்கக்கூடிய தூரத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் நாட்கள் திதி எனப்படுகிறது. மொத்தம் 30 திதிகள் உள்ளன.

அவை வளர்பிறை (சுக்ல பட்சம்) தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. மேலும், வளர்பிறையின் 15 வது நாள் பௌர்ணமியும் தேய்பிறையின் 15ஆம் நாள் அமாவாசையில் வருகிறது.

அப்படியாக, இந்த இடைப்பட்ட காலங்களில் வரக்கூடிய திதிகளில் நாம் சில காரியங்கள் செய்யலாம் என்றும் சில காரியங்கள் செய்யக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதை நாம் கருத்தில் கொண்டு செய்யும் பொழுது நமக்கு நன்மைகள் கிடைக்கிறது. அப்படியாக அதைப்பற்றி பார்ப்போம்.

எந்த திதியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? முழுமையான விவரங்கள் இதோ | Things We Do And Donts On Thithi

தொடர் தோல்வியா? 12 ராசிகளும் விநாயகருக்கு செய்யவேண்டிய முக்கிய வழிபாடு

தொடர் தோல்வியா? 12 ராசிகளும் விநாயகருக்கு செய்யவேண்டிய முக்கிய வழிபாடு

பிரதமை:

இந்த திதியில் புதிய தொடக்கங்கள் நல்ல காரியங்களை செய்யலா. அதற்கு உகந்த நாளாக உள்ளது.

துவிதியை:

குடும்ப உறவுகள் மேம்படவும் சகோதர ஒற்றுமை கிடைக்கவும் சிறந்ததாக இருக்கிறது. ஆதலால் இந்த காலகட்டங்களில் குடும்பத்தின் சண்டைகள் தீர இந்த காலகட்டங்களில் பேசுவது நல்ல பலன் கொடுக்கும்.

திருதியை:

செல்வ வளம் லட்சுமி கடாட்சம் பெற ஏற்ற நாள். மகாலட்சுமி வழிபாடு செய்வது பொன் பொருள் வாங்குவது சிறந்த நாளாக இருக்கிறது.

சதுர்த்தி:

விநாயகரை வழிபாடு செய்ய மிக உகந்த நாளாக இருக்கிறது. அதற்கு பரிகாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்ற பொழுது தடைகள் யாவும் விலகும்.

பஞ்சமி:

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த திதியில் நாக வழிபாடு செய்வது ஜாதகத்தில் ஏற்படுகின்ற தடைகளை அகற்றும்.

சஷ்டி:

முருகப்பெருமானை வழிபாடு செய்ய உகந்த நாள். திருமணம், குழந்தை பாக்கியம் சகோதரர்களுக்கு இடையே சண்டை கணவன் மனைவி பிரிந்து வாழ்பவர்கள் இந்த திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நற்செய்தி வந்து சேரும்.

2026: இன்று ஆனி பௌர்ணமி.. வீடுகளில் என்ன செய்யலாம் ?என்ன செய்யக்கூடாது?

2026: இன்று ஆனி பௌர்ணமி.. வீடுகளில் என்ன செய்யலாம் ?என்ன செய்யக்கூடாது?

சப்தமி:

சூரிய பகவானை வழிபாடு செய்ய மிக உகந்த நாளாக இருக்கிறது. இதனால் சூரிய தோஷம் ஆகியவை விலகும்.

அஷ்டமி:

பைரவர், துர்க்கை அம்மன், கிருஷ்ணரை வழிபாடு செய்யும் உகந்த நாளாக இருக்கிறது. வாழ்க்கையில் தொழில் ரீதியாக தடைகளை சந்திப்பவர்கள் கண் திருஷ்டி செய்வினை கோளாறுகள் ஆகியவற்றிலிருந்து விடப்பட இந்த திதியில் வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் உண்டு.

நவமி:

அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த சிறப்பான நாள். தசமி: திதியில் தொடங்குகின்ற காரியம் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை பெற்றுக் கொடுக்கும்.

ஏகாதசி:

விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபாடு செய்யவும் பொழுது அவரின் முழு அருளை பெறலாம். பாவங்கள் நீங்கவும் சிறந்த நாள்.

துவாதசி:

பாரணை செய்து புண்ணியம் பெறக்கூடிய அற்புதமான நாள். திரயோதசி: பிரதோஷம் வழிபாட்டிற்கு உரிய முக்கியமான திதி. இந்த நாளில் வழிபாடு செய்யும்பொழுது கர்ம வினைகள் யாவும் விலகும்.

சதுர்த்தசி:

சிவபெருமானைவழிபாடு செய்ய மிக உகந்த நாள். அவருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது தடைபட்ட காரியங்கள் மீண்டும் தொடரும்.

பௌர்ணமி:

ஆன்மீக சக்தி அதிகரிக்க கூடிய நாள். இறை வழிபாட்டிற்கு உகந்த நாள்.

அமாவாசை:

முன்னோர்கள் வழிபாடும், தர்ப்பணம் செய்வதற்கும் மிக உகந்த நாள். அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவதற்கு அற்புதமான நாள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US