புரட்டாசி மகாளய பட்சம் காலத்தில் என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது
இன்று முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆனது.அதாவது ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் நம் முன்னோர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையை மட்டும் சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர். அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது மிகவும் விஷேசமானதாகும் சிறப்பாகவும் கொண்டாப்பட்டு வந்து இருக்கிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
மகாளய பட்சம் எப்போதும், ஆவணி பௌர்ணமி முடிந்த மறுநாள் ஆரம்பமாகி அதற்கு அடுத்து வரும் அமாவாசை வரையிலான இரண்டு வார காலம் இருக்கும். மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யசெய்து வழிபாடு செய்வோம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்த காலத்தில் தானங்களை செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன்கள் கிடைக்கும்.
மேலும் பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மை பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.
இந்நாட்களில் நம் வீடுகளை மிக தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது அவசியம். இந்த மகாளய பட்ச காலத்தில் திருமணம் போன்ற எந்த சுபகாரியத்தையும் செய்யமாட்டார்கள்.
ஏனென்றால் இந்த காலப்பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரிய காலமாக கருதப்படுகிறது. சிரார்த்தம், திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்ப்பது, அதாவது சொத்து சமந்தமான பிரச்சனைகள் தீர்க்கும் காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பதாகும்.
மேலும் நாம் மகாளய பட்ச காலத்தில் சில பொருட்களை தானம் செய்வதால் நம்முடைய வாழ்க்கையும் குடும்பம் நலம் பெரும்.அதை பற்றி பார்ப்போம்.
அன்னதானம் - மகாளய பட்சத்தில் நம்முடைய முன்னோர்களின் பசியை போக்குவோம்,அவர்களின் பசிமட்டும் அல்லாமல் பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கும் உணவு கொடுப்பதனால், நம்முடைய பல தலைமுறையினருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆடை தானம் -ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, துண்டு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம். நெய் தானம் - சுத்தமான பசு நெய் தானமாக வழங்குவதன் மூலம் குடும்ப பிரச்சனைகள் நீங்கி முன்னோர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும்.
தங்கம் மற்றும் வெள்ளி தானம் - மகாளய பட்ச காலத்தில் தங்க பொருட்களை தானம் செய்வதன் மூலம் தானம் செய்பவர் சந்தித்து வரும் குரு தோஷம் அல்லது குரு கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும் என்று நம்பப்படுகிறது.
எள் தானம் - இந்த காலத்தில் கருப்பு எள் தானம் செய்வதன் மூலம் அனைத்து குடும்பத்தில் ஏற்பட்ட தடைகளிலிருந்தும் விடுதலை பெறுவர். இதுமட்டுமின்றி கிரகங்கள் மற்றும் ராசியினால் ஏற்படும் தடைகள் விலகும்.
உப்பு தானம் -நாம் உப்பு தானம் செய்வது எதிர்மறை சக்தியிலிருந்து விடுதலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி இந்நாட்களில் உப்பை தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
எனவே மறக்காமல் இந்த மகாளய பட்ச காலத்தில் நம்மால் முடிந்த தானங்களை செய்து முன்னோர்களின் ஆசியை முழுமையாக பெறுவோம்.
நம்முடைய வாழ்வு செழிக்க குலதெய்வ வழிபாடு எவ்வளவு அவசியமோ அந்த அளவு நம்முடைய முன்னோர்களின் ஆசியும் வழிபாடும் முக்கியம்.அதற்கான காலம் இது.ஆக இந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்களுக்கு நம்முடைய கடமைகளை மறவாமல் செய்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |