வீட்டு பூஜையின் போது செய்யக்கூடாத தவறுகள்

By Sakthi Raj Sep 25, 2024 10:00 AM GMT
Report

இந்துக்கள் வீட்டில் கட்டாயமாக பூஜை அறை இருக்கும்.அப்படியாக பெரும்பாலும் வீடுகளில் தினமும் காலையில் முடியாவிட்டாலும் மாலையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது உண்டு.அந்த வகையில் நமக்கே தெரியாமல் நாம் அறியாமல் பூஜை அறையில் செய்யும் சிறு சிறு தவறுகள் பற்றியும் அதை எப்படி மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

நம்மில் சிலர் பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசும் வழக்கம் வைத்து இருக்கின்றோம்.அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.அதாவது தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

சிலர் இடமின்மை காரணமாக பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்திருப்பார்கள்.அவ்வாறு வைப்பதை தவிர்க்க வேண்டும்.அதனால் வீட்டிற்கு சாபமுண்டாக நேரிடும்.

மேலும்,ஒருவர் விரத விரதம் மேற்கொள்ளும் பொழுது தாம்பூலம் தரித்தல்,பகலில் உறங்குதல்,வீட்டில் சண்டை போடுதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

வீட்டு பூஜையின் போது செய்யக்கூடாத தவறுகள் | Things We Shoul Follow In Pooja Room

நாம் நிறைய பேர் பூஜையில் வைக்கும் வாழைப்பழத்தில் ஊதுபத்தியை சொருகி வைப்பது உண்டு.அவ்வாறு வாழைப்பழத்தில் பத்தியை சொருகி வைக்கக்கூடாது.

தேங்காய் உடைத்து பூஜைக்கு வைக்கும் பொழுது இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

மன கவலைகளை போக்கும் பகவத் கீதை

மன கவலைகளை போக்கும் பகவத் கீதை


விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

பூஜை செய்யும் பொழுது ஈர உடையுடனும்,பெண்கள் தலை முடியை விரித்தவாறும் தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக்கூடாது.

சுப்ரபாதம் என்பது காலையில் கேட்கும் பாடல் ஆகும்.தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது தவறானதாகும்.

வீட்டு பூஜையின் போது செய்யக்கூடாத தவறுகள் | Things We Shoul Follow In Pooja Room

கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கை ஏற்றுவதற்கு முன்னால் வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை மூடி விட வேண்டும். புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக்கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US