மன கவலைகளை போக்கும் பகவத் கீதை
வாழ்க்கையில் மிக முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று தர்மம்,நேர்மை பணிவு.இவை தான் நாம் வாழும் பல நூறு காலங்களுக்கு சேர்த்து வைக்க போக மிக பெரிய சொத்துக்கள்.மனிதன் உண்மையில் பிறவி பயனில் என்ன சம்பாதிக்கின்றான் என்றால் அவனுடைய பாவ புண்ணியங்கள் மட்டுமே.ஆன்மா ஒன்று ஆனால் உடல் எத்தனையோ?அவை இன்னும் புரியாத புதிர்.
ஆக சக மனிதனுக்கும் உயிர்களுக்கும் நாம் எந்த ஒரு தீங்கு விளைவிக்காமல் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து வாழ்வதே தர்மம் ஆகும்.
ஆனால் இங்கு நாட்டில் எதுவும் நிறைய இடங்களில் இவ்வாறு நடப்பது இல்லை.வேறுபாடுகள் துன்புறுத்தல் கொடுமைகள் போன்றவை பிற உயிர்களுக்கு விளைவித்து கொடுமைகள் நடக்கிறது.தர்மம் தோற்று போகின்றது.
உலகத்தில் தர்மம் தோற்று போனால் அங்கு கிருஷ்ணர் அவதரிப்பார் என்பது புராணம்.அப்படியாக உங்களுடைய வாழ்க்கையில் பிற மனிதர்களால் துன்பம் விளைவிக்க பொழுது உங்களுடைய நியாயம் தூக்கி ஏறிய படும் பொழுது இதை சொல்லுங்கள் மனதில் தெம்பும் தைரியமும் பிறக்கும்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே(பகவத் கீதை 4:7-8)
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் நல்லவர்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், நல்லவர்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |