வீட்டின் எதிர்மறை சக்தியை விரட்ட அமாவாசையில் திருஷ்டி கழியுங்கள்

By Sakthi Raj Sep 25, 2024 06:30 AM GMT
Report

கண் திருஷ்டி என்பது கணிக்க முடியாதது.யார் கண்கள் எதிர்மறை மற்றும் நேர்மறை பார்வை கொண்டு இருக்கிறது என்பது யாரும் கண்டுபிடிக்க இயலாதது.அப்படியாக இந்த கண் திருஷ்டி ஆனது ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவு மாற்றி விடமுடியும் என்று சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

ஏன் என்றால் திருஷ்டிக்கு மிக பெரிய எதிர்மறை ஆற்றல் உண்டு.அது ஒருவரின் வாழ்வை திசை திருப்பி பயங்கர கேடுகளை விளைவித்து விடும்.

அப்படியாக நாம் ஒருவரின் பார்வையை மாற்ற இயலாதது ஆனால் அவர்களால் ஏற்பட்ட திருஷ்டியை நம்மால் கழித்து நமக்கு நல்ல பலன்களை கொண்டு வர முடியும்.இப்பொழுது ஒருவருக்கு ஏற்பட்ட திருஷ்டியை எப்படி கழிப்பது எந்த நாளில் கழித்தால் சிறந்த பலன்களை தரும் என்று பார்ப்போம்.

வீட்டின் எதிர்மறை சக்தியை விரட்ட அமாவாசையில் திருஷ்டி கழியுங்கள் | Kan Thirshti Parigarangal 

கண் திருஷ்டியை அமாவாசையில் கழிப்பது மிக சிறந்த பலன்களை தரும்.அன்றைய நாளில் ஒரு கருப்பு நிற துணியில் வெண்கடுகு பச்சைக்கற்பூரம் வைத்து முடிந்து வீட்டில் உள்ளோரை கிழக்குமுகமாக நிறுத்தி வலது இடமாக தலா மூன்று முறை சுற்ற வேண்டும்.

இதை குடும்பத்தில் மூத்த உறுப்பினர் செய்வது சிறப்பு.கடைசியாக அந்த மூத்த நபரையும் சுற்றி அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வீட்டுமுன் வாசலுக்கு வெளியே வைத்து எரிக்க வேண்டும் .இவ்வாறு செய்வதால் வீட்டில் ஏற்பட்ட கடுமையான கண்திருஷ்டி விலகும்.

நடக்காத காரியத்தையும் நடத்தி காட்டும் பைரவரின் பஞ்சதீப வழிபாடு

நடக்காத காரியத்தையும் நடத்தி காட்டும் பைரவரின் பஞ்சதீப வழிபாடு


மேலும் வியாபாரம் செய்யும் இடத்தில் இதே முறையில் கொஞ்சம் பெரிய சதுர கருப்பு துணியில் மேற்சொன்ன பொருட்கள் வைத்து கடை முன் நின்று கடையை மூன்றுமுறை வலம் இடம் சுற்றி எரிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம்,கண் திருஷ்டி விலகி வியாபார இடம் நல்ல செழிப்பாகவும் நேர்மறை ஆற்றலோடும் நல்ல முறையும் வருமானம் கிடைக்கபெறுவோம்.இவ்வாறு கழிக்கின்ற திருஷ்டியை இரவு 9 மணிக்கு மேல் செய்வது நல்ல பலன்களை தரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US