வீட்டில் இந்த நேரங்களில் கண்ணாடி உடைகிறதா? இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்
வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் சில முக்கியமான பொருட்களுக்கு அதிக அளவில் நாம் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அதில் ஒன்று தான் கண்ணாடி ஆகும். நாம் பொதுவாகவே இந்த கண்ணாடியை கவனமான முறையில் நாம் பார்த்துக்கொண்டாலும் சமயங்களில் நம்மை அறியாமல் அவை கை தவறி கீழே விழும் வாய்ப்புகள் உள்ளது.
அதை நாம் தவறுதலாக கீழே விழுந்து உடைந்து விட்டது என்று எடுத்துக்கொண்டாலும் வாஸ்து ரீதியாக அதற்கு பின்னால் சில முக்கியமான விஷயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
வாஸ்து ரீதியாக கண்ணாடி ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் குறிக்கிறது. அதனால் கண்ணாடியை கையாளும் பொழுது நாம் எப்பொழுதும் கவனமாக மிகவும் கையாள வேண்டும். ஒரு பொழுதும் நாம் வீடுகளில் உடைந்த கண்ணாடி பொருட்களை வைத்திருக்கூடாது.
அதை உடனே அகற்றி விடுவது நன்மை தரும். இல்லையென்றால் குடும்பத்தில் விரிசல், மனஉளைச்சல் போன்ற விஷயங்கள் உண்டாகும். மேலும், நம்முடைய சாஸ்திரத்தில் கண்ணாடி லக்ஷ்மிதேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது.
அதனால் உடைந்த கண்ணாடி வீடுகளில் இருந்தாலும், திடீர் என்று கண்ணாடி உடைந்தாலும் வீட்டில் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
அதனால், முடிந்த அளவு எவ்வளவு அழகான கண்ணாடி பொருளாக இருந்தாலும், அவை சிறிது உடைந்து காணப்பட்டால் அதை உடனடியாக அகற்றி விடுவது குடும்ப உறுப்பினர் இடையே சந்தோஷத்தை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |