புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?

By Sakthi Raj Sep 16, 2024 05:30 AM GMT
Report

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. அன்றைய மாதத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேங்கள் நடைபெறும்.மேலும் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதை தாண்டி நம்முடைய முன்னோர்களுக்கும் சிறப்பான மாதமாக கறுப்படுகிறது.

அப்படியாக நாம் புரட்டாசி மாதத்தின் சிறப்புகளையும் புரட்டாசி மாதம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றியும் பார்ப்போம். புரட்டாசி மாதத்தில், சூரியன் 'கன்னி' ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது.

புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது? | Things We Should Do And Dont In Puratasi Month

தென்திசை என்பது 'எமதர்மன்' இருக்கும் திசையாகும். புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் புதனின் நட்புக்கிரகம் சனி.

எனவே இவரை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும். புதன் சகல கலைகளிலும் வல்லவர். புதன் புத்திக்கூர்மை, கற்றல் போன்றவற்றுக்கு அதிபதி. ஆகையால் இவரை வழிபடுகிறவர்களுக்கு அறிவைக் கொடுப்பார்.

புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது? | Things We Should Do And Dont In Puratasi Month

புரட்டாசி மாதத்தில் செய்யவேண்டியவை

புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு மட்டும் நவராத்திரி பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.

இந்த மாதத்தில் வரும் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது போன்ற விஷேச நிகழ்வுகளை செய்யலாம்.

வருமான தடை நீங்க நம் வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரம்

வருமான தடை நீங்க நம் வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரம்


புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாதவை

புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாதவை என்று எடுத்து கொண்டால் புதிய வீடு வாங்குதல் புதிதாக வியாபாரம் தொடங்குதல் கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யக்கூடாதவை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US