2025 சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
இந்த 2025 ஆம் ஆண்டு வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று அரிய சந்திர கிரகணம் நிகழ்வுள்ளது. இந்த நாள் ஜோதிடத்தில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அப்படியாக இந்த நாளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று பார்ப்போம்.
கிரகண நேரத்தில் ஜோதிட ரீதியாக சில ராசியினருக்கு நன்மையாகவும் தீமையாகவும் அமைகிறது. அப்படியாக கிரகணம் நிகழக்கூடிய நாளில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு நம்முடைய இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய நாளில் சிலருக்கு மனம் பதட்டத்துடன் காணப்படும்.
அந்த மன பதட்டத்தை போக்குவதற்காக துர்கா தேவியின் மந்திரங்களும், சிவபெருமானுடைய மந்திரங்கள் கேட்பதும் சொல்வதும் நல்ல பலனை கொடுக்கும். வீடுகளில் முடிந்த அளவு சுவாமி பாடல்களை அன்றைய தினம் காலையில் ஒலிக்க செய்வது அனைவரையும் மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும்.
மேலும் கிரகணம் முடிந்து மறுநாள் காலையில் தலைக்கு குளித்துவிட்டு சிவபெருமான் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்தால் மிகச் சிறந்த பலனை பெறலாம். அதோடு கிரகணம் முடிந்து மறுநாள் அதாவது செப்டம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சிவபெருமான் கோவிலுக்கு சென்று வெள்ளி, செம்பு அல்லது பித்தளை நாகப்படம் சந்திர பிம்பம் போன்றவற்றை தானம் செய்யலாம்.
அதோடு ராகு பகவானுக்கு உளுந்தும் சந்திர பகவானுக்கு அரிசியும் இதனுடன் வெள்ளை துணி, நெய் போன்றவை தானம் செய்வது நமக்கு கிரகங்களில் இருந்து வரக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







