ஆடி மாதம் கட்டாயம் செய்யக்கூடாத முக்கியமான 5 விஷயங்கள் என்ன?

By Sakthi Raj Jul 15, 2026 07:25 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 15ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மற்றும் இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. பலரும் இந்த ஆடி மாதத்தில் குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்கள்.

அப்படியாக, ஆடி மாதத்தில் நாம் கட்டாயம் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். ஆடி மாதத்திற்கு ஒரு பழமொழி உண்டு. ஆடி காற்று அம்மியும் பறக்கும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள்.

அதாவது, பெரும்பாலும் அந்த காலத்தில் வாழ்க்கை முறை விவசாயம் செய்யும் தொழில்கள் மற்றும் பருவ காலத்தின் அடிப்படையில் நிர்ணிக்கப்பட்டவை.

மேலும், ஆடி மாதம் அதிக அளவில் வெயில் மற்றும் மழை இருக்காது. ஆனால், இந்த காலகட்டங்களில் காற்றில் பரவக்கூடிய நோயின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆடி மாதம் முழுவதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம் உள்ளது.

ஆடி மாதம் கட்டாயம் செய்யக்கூடாத முக்கியமான 5 விஷயங்கள் என்ன? | Things We Should Do And Donts On Aadi Month

2026: ஜூலை 16 நடக்கும் சூரியன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகள் காவனமாக இருக்க வேண்டுமாம்

2026: ஜூலை 16 நடக்கும் சூரியன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகள் காவனமாக இருக்க வேண்டுமாம்

மேலும், ஆடி மாதம் விதை விதைப்பதற்கான மாதமாகவும் இருக்கிறது. இது விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருப்பதால் பிற சுப காரியங்களுக்கு நாம் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மேலும், ஆடி மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் குறைய துவங்கும். அதனால், பருவநிலை மாற்றம் நமக்கு ஒரு சில நோய் தொற்றுகளை கொடுக்கக்கூடும். அப்படியாக, ஆடி மாதத்தில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த 2 ராசிகள் ஜோடி சேரும் பொழுது ஊர் கண்ணே படும்படி வாழ்வார்களாம்

இந்த 2 ராசிகள் ஜோடி சேரும் பொழுது ஊர் கண்ணே படும்படி வாழ்வார்களாம்

1. ஆடி மாதம் நாம் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது.

2.ஆடி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் போன்ற எந்த ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகளையும் இந்த காலகட்டங்களில் நடத்தக்கூடாது.

3. ஆடி மாதம் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க கூடாது.

4. ஆடி மாதத்தில் கட்டாயமாக நாம் புதிய வீடு புகுதல் புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.

5. ஆடி மாதத்தை பொறுத்தவரை பெண் பார்க்க செல்வதையும் தவிர்ப்பது நன்மை தரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US