இந்து மத பண்டிகைகளில் தீபாவளி என்பது மிகவும் முக்கியமாக கொண்டாடக்கூடிய அற்புதமான நாளுகும். தீபாவளி என்பது "தீப ஒளி திருநாள்" என்பது ஆகும். ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது வழக்கம்.
இந்த 2025ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையின் பொழுது நாம் வீடுகளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
தீபாவளி பண்டிகையின் பொழுது கட்டாயமாக நாம் அதிகாலை எழுந்து தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். மேலும் நாம் குளிக்கும் பொழுது தண்ணீர் சிறிது கல் உப்பும் மஞ்சளும் கலந்து குளிப்பதால் மிகச் சிறந்த பலனை பெறலாம். மேலும் தீபாவளி திருநாள் அன்றாவது நான் குளிக்கும் பொழுது சீகைக்காய் பயன்படுத்தி குளிப்பது நன்மை தரும்.
தீபாவளி பண்டிகையின் ஒரு சிறப்பே அன்றைய தினம் அனைவரும் கட்டாயமாக வீடுகளில் புத்தாண்டுகள் எடுத்திருப்போம். நாம் குளித்த பிறகு இறைவனை வேண்டிக்கொண்டு புத்தாடைகள் அணிந்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் நாம் ஆசிர்வாதம் பெற வேண்டும்.
தீபாவளி அன்று லட்சுமி தேவியை வழிபாடு செய்வது அவசியமாகும். ஆதலால் வீடுகளில் லட்சுமி பூஜை செய்வது நம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். லட்சுமி பூஜையை தீபாவளி அன்று அதிகாலை செய்ய முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் செல்லலாம்.
தீபாவளி அன்று கட்டாயம் மாலை நேரங்களில் வீடு முழுவதும் விளக்கேற்ற வேண்டும். வீடுகளில் எந்த இடத்தையும் இருள் சூழ்ந்து வைத்திருக்கக் கூடாது.
முடிந்தவர்கள் தீபாவளி என்று கோ பூஜை செய்யலாம். இது அவர்களுக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தேடி கொடுக்கும்.
தீபாவளிக்கு முந்தைய நாள் யமதீபம் ஏற்றி வைத்து முன்னோர்களை வழிபாடுசெய்ய வேண்டும். அதாவது முன்னோர்களை நினைத்து தனியாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும், இதனால் அவர்கள் மோட்சம் அடைவதாக நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







