திருமணமாகாத பெண்கள் மறந்தும் கூட இந்த ஒரு விஷயத்தை செய்யாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் ஏகாதசி என்பது விஷ்ணு பகவான் வழிபாட்டிற்கு உரிய முக்கியமான நாள். பல விஷ்ணு பக்தர்கள் இந்த ஏகாதசி நாளில் விரதம் மேற்கொள்வார்கள். அதோடு விரதங்களில் பல இருந்தாலும் ஏகாதசி விரதம் எப்பொழுதும் தனி சிறப்பை கொண்டது.
இந்த நாளில் எவர் ஒருவர் விரதம் இருந்து மனதார விஷ்ணு பகவானை சரண் அடைகிறார்களோ அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பினும் இந்த ஏகாதசி நாளில் திருமணம் ஆகாத பெண்கள் ஒரு சில விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக திருமணமாகாத பெண்கள் ஏகாதசி நாளில் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு செய்தி இருக்கிறது.
இவை பலருக்கும் பல குழப்பங்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அப்படியாக உண்மையில் ஏகாதசி நாளில் திருமணமாகாத பெண்கள் தலைக்கு குளிக்கலாமா? குளிக்க கூடாதா? என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே விரத நாளில் நாம் நம்முடைய மனதை முழுமையாக இறைவன் மட்டுமே மீது செலுத்தி வழிபாடு செய்யவேண்டும். இந்த நாளில் நம்முடைய மனம் கவன சிதறல்கள் இல்லாமல் இறைவனை சரண் அடைய வேண்டும்.
அப்பொழுது தான் நாம் விரதம் இருப்பதற்கான பலனும் நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடக்கும். அந்த வகையில் ஆதி காலங்களில் ஏகாதசி நாட்களில் விரதம் இருக்கும் வேளையில் வேற எந்த ஒரு முக்கியமான காரியங்களிலும் அவர்கள் தங்களின் மனதை செலுத்துவது இல்லை.

அந்த நாட்களில் தலைக்கு குளிப்பது என்பது அவர்களுடைய நேரத்தை எடுத்து விட கூடும் என்பதால் அவர்கள் அந்த நாளை முழுமையாக இறைவன் மீது மட்டும் செலுத்தி கழிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள்.

அதோடு திருமணமாகாத பெண்கள் ஏகாதசி நாட்களில் தலைக்கு குளிப்பது என்பது கூடாது என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் ஏகாதசி நாட்களில் நாம் வெந்நீரில் தலைக்கு குளித்து விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது அவர்களுக்கு பல விதமான நன்மைகளை மட்டுமே பெற்றுக் கொடுக்கும்.
மேலும் அந்த நாட்களில் நாம் தலைக்கு குளித்து சுத்தமாக விரதம் இருக்க தொடங்கும் பொழுது இன்னும் நம்முடைய உடலானது அதிகமான புத்துணர்ச்சியை பெற்று இறைவன் நோக்கி செல்லக்கூடிய ஒரு நல்ல பாதையை அமைக்கக்கூடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |