இந்த 3 ராசிகள் பயங்கரமான சாப்பாட்டு பிரியர்களாம்- யார் தெரியுமா?
நம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயங்களில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்தாலும் சிலருக்கு சாப்பாடு என்றால் கசப்பாக இருக்கும். அவர்களுக்கு சாப்பிடுவது என்றால் ஒரு பெரிய வேலையாக பார்ப்பார்கள்.
ஆனால் அதுவே ஒரு சிலர் சாப்பாடு என்றால் உடனே ஓடிவரக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படியாக 12 ராசிகளில் இந்த மூன்று ராசிகள் பயங்கரமான சாப்பாட்டுப் பிரியர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுவதில் ரிஷப ராசிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு உணவையும் வீண் செய்யாமல் சாப்பிடக்கூடிய பண்பு பெற்றிருப்பார்கள். இவர்கள் எல்லா உணவையும் அதற்கு தனி சுவை உண்டு என்று சுவைத்து சாப்பிடக்கூடிய ஒரு ரசனை மிக்க ஒரு நபராக இருக்கக் கூடியவர்கள். யாரேனும் ஒரு கடையில் ஒரு உணவு நன்றாக இருக்கிறது என்று சொல்லி உடனே அதை தேடி சாப்பிடக்கூடியவர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு உணவு என்றால் மிகவும் பிடிக்கும். இவர்கள் நிறைய உணவுகளை தேடி தேடி சாப்பிட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் அந்த உணவுகளை இவர்களுக்கு சமைக்கமும் பிடித்தமானதாக இருக்கும். எந்த கடைகளில் என்ன உணவுகள் சுவையாக இருக்கும் என்று சிம்ம ராசியினர் நன்றாக தெரிந்து வைத்து இருப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசிகளுக்கு உணவின் மீது எப்பொழுதும் தனி காதல் உண்டு. இவர்கள் உணவுகளை ரசித்து சாப்பிடுவதே ஒரு தனி அழகாக இருக்கும். அவர்கள் சாப்பிடுவதை பார்த்து பிறருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சுவைத்து சாப்பிடக்கூடிய தன்மை கொண்டவர்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு உணவையும் பிடிக்காது என்று ஒதுக்காத பண்பு இவர்களிடத்தில் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |