என்ன 4 ராமேஸ்வரங்கள் இருக்கிறதா? உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் முக்கியமான புனித தலங்களில் ராமேஸ்வரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியாக ராமேஸ்வரம் என்றால் நமக்கு ராமநாதபுரத்தில் அமைந்திருக்கக் கூடிய ராமேஸ்வரம் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால் மொத்தம் நான்கு ராமேஸ்வரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இது பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம்.
அதாவது ராமேஸ்வரம், திருராமேஸ்வரம், குருவிராமேஸ்வரம், காமேஸ்வரம், என நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் என போற்றப்படுகிறது. இந்த நான்கு திருத்தலங்களிலும் மகாகணபதி ஆன சதுராவ்ருத்தி தர்ப்பணம்’ என்னும் விசேஷமான பூஜையை ஆகம பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில் ஸ்ரீ ராமபிரான் செய்ததாக ஞான நூல்களில் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து நான்கு மாதம் வழிபாடுகள்:
ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியிலும் ஒவ்வொரு திருத்தலம் என்ற கணக்கில் ராமேஸ்வரம் பிதுர் புது வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சிக்கல்கள் இருந்தாலும் அவை விலகும் என்பது நம்பிக்கை. அப்படியாக இந்த நான்கு ராமேஸ்வரங்கள் எங்கு இருக்கிறது அதனுடைய சிறப்புகளை பற்றி பார்ப்போம்.
1. ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் பலரும் அறிந்த ஒரு வரலாறு தான். இங்கு ஸ்ரீ ராமர் சீதாதேவி இருவரும் கடற்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே ராமேஸ்வரத்தில் இருக்கக்கூடிய ராமநாத சுவாமி திருத்தலம் "அக்னி தீர்த்து நீராடல்" தலமாக வெவ்வேறு திருப்பெயரர்களுடன் பிரசித்தி பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் இங்கிருந்து தனுஷ் கோடிக்கு செல்லும் பாதையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் நம்பு நாயகி அம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள். இந்த நம்பு நாயகியம்மன் கோயிலில் இருந்து சிறிய தூரத்தில் தான் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீ ராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தில் நீராடிய மகத்துவத்தை சுகபிரம் மருக்கு வியாசர் விளக்கியுள்ளார்.
மேலும் நம்பு நாயகி அருளும் பூமியும் ஜடாய தீர்த்தமும் ராமநாதசுவாமி பிரதிஷ்டைக்கும் மிகவும் மூத்தவை என்று சொல்லப்படுகிறது. அதோடு ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேது மாதவப் பெருமாள் சன்னதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் என இரு சன்னதிகள் உண்டு. ராமநாத சுவாமியை தரிசிக்க சொல்லும் பக்தர்கள் கட்டாயமாக இந்த மூர்த்திகளும் தரிசித்து வருவது அவர்களுக்கு பெரும் புண்ணியத்தை கொடுக்கும்.
வாழ்க்கையில் எப்பேர்பட்ட துன்பங்கள், குடும்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் கட்டாயமாக ராமேஸ்வரம் சென்று இங்கு ஒரே நாளில் 32 தீர்த்தங்களில் நீராடுவது என்பது அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் கொடுத்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்லக்கூடிய பாதையை ராமநாதசுவாமி காட்டுவார் என்பது பக்தர்கள் இடையே இருக்கக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

2. திருராமேஸ்வரம்:
இந்த திரு ராமேஸ்வரம் என்னும் திருத்தலம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஸ்ரீ ராமபிரான் சீதாதேவியி டம் அவள் மகாலட்சுமியின் அவதாரம் என்றும் உணர்த்திய திருத்தலம் இது என்பார்கள். மேலும் திருமகள் சீதாலட்சுமி ஆக சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை நாம் இங்கு தரிசிக்கலாம்.
பக்தர்கள் பலரும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாட்களில் அனுஷ நட்சத்திர நாளன்று இங்குள்ள உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்கு சாற்றி வழிபாடு செய்கிறார்கள். இவ்வாறு செய்யும் பொழுது அவர்களுடைய வாழ்க்கை மிகவும் மங்களகரமானதாக அமைவதோடு அவர்கள் கேட்ட வரம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீ ராமநாதசுவாமி. மேலும் இழந்த பொருட்கள் மற்றும் சொத்துக்களை மீட்டெடுக்க இங்கு வந்து சுவாமி வழிபாடு செய்தால் அவை மீட்டெடுக்கும் அருளை வழங்கும் தலம்என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

3. குருவி ராமேஸ்வரம்:
குருவி ராமேஸ்வரம் என்பது திருவாரூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீ ராமர் குருவிக்கு முக்தி தந்த தலம் இது என்று சொல்லப்படுகிறது. இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு.
இங்கு இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவி ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர என்ற திருப்பெயருடனும் பக்தர்களுக்கு அருள் வாழிக்கிறார். இங்கு ஈஸ்வரன் ஜடாயுவுக்கு அவருடைய முக்தியை எடுத்துரைத்த தலம் என்று சொல்லப்படுகிறது. அப்பொழுது ஜடாயு தான் ராவணனால் மடிந்தால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே என்று வருந்தினாராம்.
அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள். ராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)’. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே’ எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத் தின் அருகிலிருப்பது விசேஷம்.
4. காமேஸ்வரம்:
காமேஸ்வரம் நாகப்பட்டினம் வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது. புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் பிதுர்முக்தி பூமி காமேஸ்வரம். இங்கு சிவாலயம் மற்றும் விஷ்ணு ஆலயம் இரண்டும் ஒரு சேர அமைந்த அற்புத தலம் ஆகும். இதனை `ராமேஸ்வர ராமேஸ்வரம்’ என்று அழைக்கிறார்கள்.
பின்னர் இவ்விடம் காமேஸ்வரம் என மாறிற்று. நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய அற்புதமான தலம் என்று சொல்லப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ளார்கள்.
நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பொய்களால் ஏற்பட்ட பிரச்சனைகளையும் பாவங்களையும் தீர்ப்பதற்கு திருத்தலத்தில் வந்து வழிபாடு செய்யலாம். அதோடு காமேஸ்வரம் திருத்தலத்திற்கு சென்று அரிச்சந்திர நதிக்கடலில் சங்கமாகும் பகுதியிலோ, காமேஸ்வரம் கடற்கரையில் நீராடினால் நம்முடைய சகல பாவங்களும் விலகி நம்முடைய வாழ்க்கை செழிப்பாகும் என்பது நம்பிக்கை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |