வீட்டில் நிம்மதி உண்டாக செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்
நம்முடைய இந்து மதத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயமாகும். அப்படியாக, ஒருவர் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், நிம்மதி உண்டாகவும் கட்டாயம் வாஸ்து ரீதியாக நாம் சில விஷயங்கள் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.
நம் வீட்டில் பொருளாதார வளர்ச்சியும், மகிழ்ச்சியும் உண்டாக வீட்டின் வடக்கு திசையில் லட்சுமி தேவியின் படத்தை வைத்து வழிபட வேண்டும். அதிலும் முக்கியமாக, லட்சுமி தேவி தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் படமாக இருப்பது இன்னும் கூடுதல் விஷேசம்.
அதே போல், வீட்டில் முக்கிய இடமான சமயலறையில் வடகிழக்கு திசை அல்லது வடகிழக்கு மூலையில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரை வைப்பது வீட்டில் நிதி நிலைமையை மேம்படுத்துகிறது. இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் தடைப்பட்ட பணமும் விரைவில் நம் கைக்கு வந்து சேரும்.
சமயங்களில் நம் வீடுகளில் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விடும். அதனால், நமக்கு மன கஷ்டம், மகிழ்ச்சியின்மை போன்ற சூழல் உருவாகும். ஆதலால், வீடுகளில் சிவன் மற்றும் சந்திரனின் மந்திரங்களை உச்சரிப்பது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
எல்லோருடைய வீடுகளில் கண்ணாடி கட்டாயம் இருக்கும். ஆக, வீட்டின் வாஸ்து குறைபாடுகள் அல்லது பண நெருக்கடிகள் விலக வடக்கு அல்லது கிழக்கு சுவரில் ஒரு பிரதான கண்ணாடியை மாட்டி வைப்பது நன்மை தரும்.
இது போன்று சிறு சிறு விஷயங்களை முறையாக கடைபிடித்தாலே நம் வீட்டில் அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |