உங்களை அறியாமல் காலை 3 மணிக்கு முழிப்பு வருகிறதா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
இந்த உலகம் நாம் தேடும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் விடையை வைத்திருக்கிறது. அதை நாம் ஆழமாக உற்று கவனித்தாலே போதும் நமக்கான விடையை நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படியாக, சிலருக்கு எவ்வளவு தான் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாலும், திடீர் என்று அதிகாலை 3 மணிக்கு கண் முழிப்பு வந்து விடும்.
அது அவர்களை அறியாமல் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு செயல் ஆகும். அவ்வாறு எழுவதற்கு பின்னால் ஆன்மீகம் ரீதியாக சில தகவல்கள் சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம். நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3-4 மணி ஆகும்.
அந்த நேரத்தில் அதிக அளவிலான நேர்மறை ஆற்றல்கள் நிரம்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த நேரத்தில் நாம் காணும் கனவுகள் எல்லாம் பலிக்கும் என்றும் தீர்க்கமாக நம்பப்படுகிறது. இருந்தாலும், அதிகாலை தொடர்ந்து 3 மணிக்கு முழிப்பு வருகின்ற பொழுது ஒரு வித பயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், அவ்வாறு பயம் கொள்ள தேவை இல்லை என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது. மேலும், அந்த அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் என்ன விஷயங்கள் செய்தாலும் அவை நமக்கு பலமடங்கு வெற்றியை கொடுக்கும் என்கிறார்கள்.
அதனால், அந்த நேரத்தில் முழிப்பு ஏற்பட்டால் நாம் அதை பயன் படுத்துவது மட்டுமே மிக சிறந்த வழியாகும். முடிந்த அளவு அந்த நேரத்தில் நேர்மறை விஷயங்களை பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி பாதைக்கு போராடுங்கள்.
கடவுள் நாமம் அல்லது மந்திரத்தை சொல்லுங்கள். மேலும், இந்த நேரத்தில் வரும் கனவை நாம் முழுமையாக கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும் என்கிறார்கள். அவை எதிர்மறை கனவுகளாக இருந்தால் அச்சம் கொள்ளாமல், சுவாமி வழிபாடு செய்வது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |