நாளை(10-05-2025) சனி பிரதோஷம் இந்த வழிபாட்டை தவறவிடாதீர்கள்
சிவபெருமானுக்கு உரிய முக்கிய விசேஷங்களில் சனி பிரதோஷம் வழிபாடும் ஒன்று. அப்படியாக, நாளை (10-05-2025) சித்திரை மாதம் வருகின்ற சனி பிரதோஷம் மிகவும் விஷேசமான நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் விலகும். பொதுவாக, ஒவ்வொரு பிரதோஷ காலங்களிலும் நாம் சிவன் கோயில்களுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் நம்முடைய வாழ்க்கையில் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும், நம்முடைய கர்ம வினைகளும் விலகும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் நாளை நாம் சனி பிரதோஷம் அன்று சிவபெருமானின் அருள் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம். நாளை நாம் கட்டாயம் சூரிய உதயத்திற்கு முன்பாக எழ வேண்டும்.
பிறகு நாம் குளித்து சுத்தமான ஆடை அணிந்து சிவபெருமான் படத்திற்கு முன்பாக அமர்ந்து பூஜை செய்யவேண்டும். சிவபெருமானுக்கு பிடித்த வில்வ இலைகள் இருந்தால் அதை மாலையாக போட்டு வழிபாடு செய்யலாம், அல்லது நம்மால் முடிந்த பூக்கள் கொண்டு மாலையாக செய்து வழிபாடு மேற்கொள்ளலாம்.
பிறகு சிவன் படத்திற்கு முன்பாக நெய் விளக்கு ஏற்ற வேண்டும். அதோடு பூஜை செய்யும் பொழுது சிவபெருமானுக்கு உரிய மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யவேண்டும். இறுதியாக, தூபம் ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்யவேண்டும்.
இந்த வழிபாட்டை நாம் அதிகாலை எழுந்து வீடுகளில் செய்வதால் குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். மேலும், நாளை முடிந்த அளவு கட்டாயம் நாம் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிக மிக அவசியமான ஒன்றாகும்.
அவ்வாறு சிவன் ஆலயம் சென்று அங்கு நடக்கும் சிவன் பூஜையில் பங்கு கொள்ளும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் மன குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |