அமாவாசை அன்று இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Oct 08, 2026 01:00 PM GMT
Report

 சாஸ்திரங்களில் அமாவாசை என்பது மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அதாவது, அமாவாசை நாளில் நம்முடைய முன்னோர்கள் நம் வீட்டு வாசலை தேடி வருவார்கள் என்பது ஐதீகம்.

அப்படி தேடி வருகின்ற பொழுது நம்முடைய நிலை வாசல் அவற்றில் சில விஷயங்கள் இருக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

அமாவாசை தினத்தன்று தலைவாசலுக்கு நேராக செருப்பு, உடைந்த பொருட்கள், பழைய துடைப்பம், குப்பைத்தொட்டி இதுபோன்ற பொருட்களை வைத்திருக்கக் கூடாது.

அமாவாசை அன்று இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள் | Things We Shouldnt Do On Amavasya Day

உங்கள் நட்சத்திரம் இதுவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் தெரியுமா?

உங்கள் நட்சத்திரம் இதுவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் தெரியுமா?

அவ்வாறு செய்வதால் பித்ருக்கள் நம்முடைய வாசலிலேயே நின்று திரும்பி விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதைப்போல், அமாவாசை தினத்தன்று திருஷ்டி கழிப்பதற்காக வாசலில் எலுமிச்சையை நறுக்கி, மஞ்சள், குங்குமம், தடவி வைக்க கூடாது. அந்த உக்கிர சக்தி நம்முடைய முன்னோர்களை அதாவது பித்ருக்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுத்து விடுகிறது.

நம்முடைய வாசலை இரவு நேரங்களில் இருட்டாக வைக்க கூடாது. முன்னோர்கள் வருகைக்காக ஒரு அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முடியாதவர்கள் மின்விளக்குகளை பயன்படுத்தலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US